Posts

மேகக் கண்ணீர்

  அன்று மாலை, நான் என்னுடைய அலுவலகத்தை விட்டுப் புறப்படும் பொழுது மணி ஐந்தைத் தாண்டி இருந்தது. நான் நேரே அறைக்குப் போகலாமா? ஊர் சுற்றிவிட்டுப் போகலாமா? என்று யோசித்துக் கொண்டே நடக்கலானேன்.   சிறிது நேரத்தில் என் கால்கள் நிலை தடுமாறி நின்றன.   கனவுலகில் இருந்த நான் சுய நினைவு பெற்றுப் பார்த்தேன்.   அது, நான்   குடி இருக்கும் வசந்த மாளிகை. நாட்டில் பல விசித்திரங்கள் நடைபெறுகின்றன.   பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு நிலைமாறாமல் வைத்துக் கொண்டு உள்ளது.   அதுபோலவே வானம் மழையை, இல்லை இல்லை மேகம் மழையைத் தருகிறது.   கதிரவன் வெப்பத்தைத் தருகிறான்.   சந்திரன் குளிர்ச்சியைத் தருகிறான். கதிரவன் தோன்றும் போது பகலாகவும், சந்திரன் தோன்றும் போது இரவாகவும் இருக்கும் போது, நான் இவற்றின் சூழலில் ஈடுபட்டவன் போல் என் கால்களும் என்னுடைய வசந்த மாளிகையை அடைந்தன. சரி, இன்று எப்படிப் பொழுதைப் போக்குவது என்று யோசித்துக் கொண்டே கிணற்றடிக்குப் போனேன்.   அப்போது அங்கு என் மனம் மகிழ்வெய்தும் ஓர் வரவேற்பே கிட்டியது எனக்கு. மாலை வெயிலின் சாயலில், வீசும் தெ...