மேகக் கண்ணீர்
அன்று மாலை, நான்
என்னுடைய அலுவலகத்தை விட்டுப் புறப்படும் பொழுது மணி ஐந்தைத் தாண்டி இருந்தது. நான்
நேரே அறைக்குப் போகலாமா? ஊர் சுற்றிவிட்டுப் போகலாமா? என்று யோசித்துக் கொண்டே நடக்கலானேன். சிறிது நேரத்தில் என் கால்கள் நிலை தடுமாறி நின்றன. கனவுலகில் இருந்த நான் சுய நினைவு பெற்றுப் பார்த்தேன். அது, நான்
குடி இருக்கும் வசந்த மாளிகை.
நாட்டில் பல விசித்திரங்கள்
நடைபெறுகின்றன. பூமி தன்னைத் தானே சுற்றிக்
கொண்டு நிலைமாறாமல் வைத்துக் கொண்டு உள்ளது.
அதுபோலவே வானம்
மழையை, இல்லை இல்லை மேகம் மழையைத் தருகிறது.
கதிரவன் வெப்பத்தைத் தருகிறான். சந்திரன்
குளிர்ச்சியைத் தருகிறான்.
கதிரவன் தோன்றும்
போது பகலாகவும், சந்திரன் தோன்றும் போது இரவாகவும் இருக்கும் போது, நான் இவற்றின் சூழலில்
ஈடுபட்டவன் போல் என் கால்களும் என்னுடைய வசந்த மாளிகையை அடைந்தன.
சரி, இன்று எப்படிப்
பொழுதைப் போக்குவது என்று யோசித்துக் கொண்டே கிணற்றடிக்குப் போனேன். அப்போது அங்கு என் மனம் மகிழ்வெய்தும் ஓர் வரவேற்பே
கிட்டியது எனக்கு.
மாலை வெயிலின்
சாயலில், வீசும் தென்றல் காற்றில், மனம் கமழும் பூச்செடிகளின் இடையே, நான் குடியிருக்கும்
வசந்த மாளிகையின் பின்புறம் அமைந்த கிணற்றடியில் நான் குடியிருக்கும் வண்டிக்கார வேலனின்
மகள் தண்ணீர் எடுத்துக்கொண்டு இருந்தாள்.
அப்பொழுது அவள்
தன் பாவாடை சற்றுத் தூக்கி இடுப்பில் செருகிய நிலையில், பலாப்பழம் போன்ற அவளது கால்கள்
தெரியும் வண்ணம் இருந்ததைத் தென்றல் காற்றானது அவள் கால்களை உராய்வதையும், கருமேகம்
தரையில் தவழ்வது போல இருந்த அவளது தலை முடியை அசைப்பதும், அவளுடைய மேலாடைகளைத் தென்றல்
காற்றானது அசைந்து உரசியது. இதே எண்ணத்தில்
இருந்த என்னை…
அப்பொழுது,
“என்னங்க! அங்கேயே
நின்னிட்டீங்க. வந்து முகம் அலம்பிக்கிட்டு
போங்க” என்றாள்.
இதுவரை அவளை நான்
நேரில் சரியாகப் பார்த்ததும் கிடையாது. நான் அவர்கள் வீட்டிற்குச் சென்ற முதல் நாள்
திடீர் சந்திப்பு, திடீர் மறைவு.
உலகிலே எத்தனை
எத்தனையோ திடீர் வரவுகள், திடீர் செலவுகள், திடீர் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மழை வருவதும் திடீரென்றுதான். அதே சமயம் திடீரென்று மறைந்தும் விடுகிறது.
அதுபோலத்தான்
அவள் அன்று வந்த முதல் நாளே அவளுடைய தந்தையிடம் பேசிக் கொண்டு இருந்தேன்…
அப்போது, யாரோ
வீட்டிற்குள் நுழையும் சத்தம். ‘யானை வரும்
பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பது போல ஜல் ஜல் என்ற ஒலியுடன், காற்று மரக்கிளைகளை
ஆட்டிப் படைக்கும் போது ஏற்படும் சலசலப்பு எல்லோருடைய கவனத்தையும் ஈர்ப்பதுபோல் சத்தம்
உண்டாக்கும்.
அதுபோல, இரு கால்களுக்கு
இடையே அகப்பட்டுத் திண்டாடும் பாவாடை ஏற்படுத்தும் சலசலப்பு கலந்து வந்து, பெண் என்பதற்கான
அத்தாட்சியாக மல்லிகைப்பூ மணம், காற்றில் கலந்து எனது மூக்கைத் துளைத்து மண்டைக்குத்
தெரிவித்தது.
வருவது பெண் என்று
இத்தனையும் ஒரு சில நொடிக்குள் என் மனம் ஊகித்துக் கொள்வதற்குள் அவ்வுருவம் மின்னலாய்
என்னைக் கடந்து சென்றுவிட்டது.
இதற்குள், “என்ன
தம்பி, என்ன யோசிக்கரே…” என்றார் வேலன்.
“ஆ… ஒன்றுமில்லே…”
என்றேன்.
“ஒன்றுமில்லாமலா
இப்படி…”
“அது…”
“என் மகள். பெயர்
பாக்கியம்.”
“பாக்கியமா?”
“ஆமாம்… என்ன
அப்படி பார்க்கறீங்க…”
யாருக்குத்தான்
பாக்கியம் நிலைக்குது. சிலருக்கு எதிர்பாராத
விதமாக ஒரு நல்ல குடும்பம் அமைந்தால் அது என் பாக்கியம் என்பார்கள்.
அதுபோலவே, நல்ல
வசதி படைத்தவனுடைய வாழ்வில் குறைவு ஏற்பட்டால் அதற்கு அவன் தனக்குக் கிடைத்த பாக்கியம்
அவ்வளவு தான் என்று தனக்குத் தானே தன் மனதைத் தேற்றிக் கொள்கிறான்.
ஒருவன் தான் இதைக்
காண வேண்டும் என்று விரும்பிச் செல்கின்றான்.
காண வேண்டியதையும் பார்க்கின்றான், பேசுகின்றான். ஆனால், அவனுடைய மனநிலை பாதிக்கிறது. ஏன்? அவன் நிலையும் பாதிக்கிறது. காரணம் அவன் காதலியின் பிரிவு, பின் அவன் பல கற்பனைகள்
செய்வது உண்டு. பின்னர் ஒரு முடிவுக்கு வருகிறான். அதன் பின்தான் நான் வாழ்ந்தே தீருவேன். நாடு நமக்கு
என்ன செய்கிறது என்று எண்ணாமல், நாம் நாட்டிற்கு என்ன செய்தோம் என்று நினைத்து, ஏற்பட்ட
பிரிவு தனக்குக் கிடைத்த பாக்கியம் இவ்வளவு தான் என்று ஏங்குவோர் எத்தனை பேர்.
அதுபோல, தான்
பாக்கியத்தின் முகத்தைக் காணும் பாக்கியம் இல்லாமல் பின் உருவைக் கண்டேனே.
அடடா! அவளை நான்
முன் அழகைக் காணும் பாக்கியம் இல்லை என்றாலும், அவளுடைய பின்னழகு…
வண்ண வண்ணப் பறவைகள்
சின்னம் அடைந்த பாவாடையும், ஜொலிக்கும் நைலான் சிவப்புக் கலர் தாவணியும் அதற்குத் தகுந்த
ஜாக்கெட்டும், அவள் உடலின் சதைப் பற்றும் உள்ள இடம் கொழுகொழு என்று கதிரவன் கண்ணாடியின்
ஊடே தன் ஒளியை ஒளிர்வது போல அவள் உடம்பின்மீது மின்சார விளக்கின் ஒளிகள் அவள் முதுகுத்
தோள் பட்டையில் ஒளிர்ந்ததைக் கண்டு வியந்தேன்.
அவள் தலைமுடி
அடடா, தலை முடியா அது. இல்லை அவள் இடுப்பில்
விளையாடும் கருங்குழந்தை. ஐயோ! நானாக அந்தக்
கூந்தலாக இருந்தால்… என்று எல்லாம் நினைத்தேன்.
அவள் ஒவ்வொரு
அடியாக எடுத்து வைக்கும் போதும் என் நெஞ்சில் ஒவ்வோர் இஞ்சாக இடம் பிடிப்பதுபோல ஓர்
பிரமை. அப்போது,
“என்னங்க! அங்கேயே
நின்னிட்டீங்க, முகம் அலம்பிக்கலியா!” என்று கேட்டாளே பாக்கியம்.
அப்பொழுதுதான்
நான் இதுவரை கனவுலகில் கடந்த கால நினைவில், இந்த உலகை விட்டுவிட்டு சுய நினைவு பெற்றுத்
தொண்ணூறு வயதுக் கிழவன் நடப்பது போல கிணற்றடிக்கு வந்தேன்.
இப்பொழுது கிழவர்கள்
எல்லாம் இளைஞனாக மாற ஆசை கொள்ளும் போது இளைஞர்கள் கிழவனாக ஆசை கொள்வதில் தப்பில்லை.
மீசை நரைத்தாலும்
ஆசை நரைக்காது என்பார்கள். அதுபோல், நான் கோல்
இல்லாத கிழவன் போல தள்ளாடித் தள்ளாடி கிணற்றடிக்கு வந்தேன்.
நான் முகம் அலம்பும்போது
அவள் என்னையே பார்த்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. முகம் அலம்பிக் கொண்டு மீண்டும் பார்த்தேன். அப்பொழுதும்
அவன் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருப்பது தெரிந்தது.
எனக்கு வந்ததே
வெட்கம்.
பெண்களுக்குத்
தான் வெட்கம் என்பார்கள். ஆனால் ஆண்கள் எல்லாம்
பெண்கள் முன் கோழையாகி விடுகிறார்கள். அவர்கள்
ஆட்டி வைக்கும் தஞ்சாவூர் பொம்மையாகி விடுகிறார்கள் ஆண்கள். அந்த நிலையில் தான் நானும்
அவளைக் கண்டதும் எங்கிருந்து வந்து ஆட்கொண்டதோ வெட்கம். ஒரே நடையாக நடந்து எனது வசந்த மாளிகையை அடைந்தேன்.
(2)
இரவு ஏழு மணி
இருக்கும். தெருக்களில் எல்லாம் வண்ண வண்ண
மின் விளக்குகள் வீடு தோறும் ஒளிர்விட்டுக் கொண்டு இருந்தன. வானத்தில் நட்சத்திரங்கள் அங்கும் இங்கும் எதையோ
தேடுவதைப் போலக் காணப்பட்டன. நல்ல கருமையான
மேகமானது அவற்றை மறைக்கும் முகமாக மழைத்துளிகளைத் தூவிக் கொண்டு இருந்தன. சாலையில் கனரக வாகனங்களும், மகிழுந்துகளும், பேருந்துகளும்
சர்… சர்… என்று போவதும் வருவதுமாக தூண்டிவிட்ட புலியைப் போல சத்தம் எழுப்பிக் கொண்டு
சென்றன. இதன் இடையே ஒர் உருவம் நடந்து சென்றுக்
கொண்டு இருந்தது. அந்த உருவம் அன்னப் பறவையோ
என்று எண்ணும் வகையில் மெல்ல அடிமேல் அடிவைத்து நடந்துச் சென்று கொண்டு இருந்தது. அந்த உருவம் ஒரு இருட்டான பாதையில் திரும்புவதைக்
கண்டதும் எங்கிருந்துதான் வந்தார்களோ நான்கு பேர்கள். அவர்களும் அவள் பின் தொடர்ந்து நடந்தனர். அதைப் பார்த்த அவ்வுருவம் நடையை வெகுவேகமாக மாற்றியது. தொடர்ந்தவர்களும் இன்னும் வெகுவேகமாக நடந்தனர்.
அவ்வுருவத்தை
இந்த நான்கு உருவமும் பிடித்துக் கொண்டன. அப்போது…
“ஐயா! யாரும்
இல்லியா! காப்பாத்துங்க… காப்பாத்துங்க…” என்கிற அலறல் சத்தம் எழுந்தது.
மூடுடி வாயை…
ஆ… கொக்கரிக்கும் சிரிப்புச் சத்தம் பலமாக அங்கே எழுந்தது.
ஐயோ! யார் நீங்க…
என்கிட்டே ஒண்ணுமில்லீங்க… என்னை விட்டுடுங்க… என்றது அந்தப் பெண் உருவம்.
டேய்… இவகிட்டே
ஒண்ணுமில்லையாமே… என்றான் ஒருவன்.
பார்த்துடலாமா…
என்றான் மற்றொருவன்.
பார்த்துடலாம்…
என்றான் இன்னொருவன்.
பேசாதேடா… என்றான்
இன்னுமொருவன்.
பார்த்திக்குங்க..
இந்தப் பை… என்று அந்தப்பெண் உருவம் தன்னிடம் தோளில் மாட்டியிருந்த பையைக் காட்டினாள்.
அடடா…ச்சு… என்றனர்
அந்த நால்வரும்.
வேற எங்கிட்டே
ஒண்ணுமில்லீங்க… என்றாள் அந்தப் பெண்.
டேய்… வேற இல்லீயாமே…
என்றான் அந்த நால்வரில் ஒருவன்.
ஐயா! எங்கிட்டே
உண்மையா எதுவும் இல்லை… என்னை விட்டுடுங்க… என்று கெஞ்சினாள் அந்தப் பெண்.
ஐயோ! பாவம்… எங்க
முதலாளி நீ இல்லாமல் கஷ்டப்படுறாரு… நீ என்னடா என்றால் ஒண்ணுமே இல்லே… ஒண்ணுமே இல்லே…
என்ற பாட்டையே பாடுறியே… என்றான் மற்றொருவன்.
அடப் பாவிகளா!...
என்று அவர்களின் உள்நோக்கத்தைப் புரிந்த அந்தந் பெண் கூச்சலிட்டாள்.
அதலெல்லாம் அப்புறம்…
முதலாளிக்குப் பசியாயிருக்கும் ஆ… கிளம்பு… என்றான் ஒருவன்.
ஐயோ!... யாரும்
இங்கே இல்லீங்களா!... என்னைக் காப்பாத்துங்க… ஐயா! என்னைக் காப்பாத்துங்க… என்று கூக்குரலிட்டாள்.
மேலும், என்னை
விட்டுடுங்க… நான் மானம் உள்ள பெண்ணுங்க… என்று கெஞ்சினாள்.
மானமுள்ள பெண்ணா!...
இது ஒருத்தன்
ஆமாண்டா! அப்படிப்பட்டவ
தான்டா நம்ம முதலாளிக்குப் பிடிக்கும்… மற்றொருவன்.
முதலாளி… முதலாளி…
யார் அந்த முதலாளி முதலை… என்றாள் அப்பெண்.
ஆ… என்ன எங்க
முதலாளியை முதலை இன்னா சொல்லிட்டே… டேய்… தூக்குங்குடா… இவளை… என்றான் இன்னொருவன்.
ஐயா! காப்பாத்துங்க…
அண்ணே என்னை விட்டுடுங்க… உங்க கால்லே விழுந்து கும்பிடுகிறேன்… என்றாள்.
நாங்க உன் அண்ணனுங்க
தான்... எங்க முதலாளி மச்சானுக்கு உன்னை… என்றான் ஒருவன்.
அண்ணே! என்னை
விட்டுடுங்க… உங்களுக்குப் புண்ணியமா போகும்… என்றாள்.
ஆ… அதுதான் முடியாது…
என்றான் ஒருவன்.
ஆ… என்ன?... என்றாள்.
ஆமாம்மா… நான்
எங்க முதலாளி கிட்டே விசுவாசத்துக்கு இல்லே, பணத்துக்காக இருக்கோம். பணம்… பணம்… என்ன
புரியுதா?... என்றான் ஒருவன்.
சே… நீங்கள் மனிதர்களா? பணம் என்றால் எதையும் செய்வீர்களா?... என்றாள்.
ஆமாம்… இது ஒருவன்.
உன் பொண்டாட்டிக்கும்
பணம் தருவான்… கூட்டிட்டுப் போவியா?... என்றாள்.
படார்… என்று
ஒருவன் தன்னுடைய ஐந்து விரலை அவளது கண்ணத்தில் பதியவிட்டான்.
டேய்… இவளைப்
பேச விட்டதே தப்பு… உம் கட்டுடா.. பிடி… கயிறு எடு… கட்டுடா… இப்படித்தான்… இறுகப்
பிடி… இறுக்கு… என்று அந்த பெண்ணைப் பேசவிடாமல் வாயை அடைத்து, கண், கை, கால்களைக் கட்டிப்
பேசவும் அசையவும் முடியாமல் குண்டுக் கட்டாகக் கட்டித் தூக்கிக் கொண்டு பதுங்குப் புலி
போல நடந்தனர்.
முதலாளி இதோ நீங்க
கேட்ட பழம்… என்று அந்தப் பெண்ணைக் கீழே வைத்தனர்.
ஆம்… நீங்க… போங்க…
எனக்குப் பசி அதிகமாக இருக்கிறது… என்றான் முதலாளி.
அவளுடைய கண் கட்டை
அவிழ்த்து, வாயில் திணித்திருந்த துணியை விலக்கி, கால் கட்டையும் கை கட்டையும் அவிழ்க்க
போனான் முதலாளி. அப்போது,
ஆ!... நீங்களா…
என்று அவனைப் பார்த்துக் கத்தினாள் அப்பெண்.
ஆமாம்… நானே தான்…
என்றான்.
நீ… எப்படி… இங்கே…
என்றாள்.
எப்படி நான் இங்கே
வந்தேன் என்கிறாயா? நான் இந்தக் கூட்டத்திற்கே
தலைவன். என் தொழில் கள்ளக்கடத்தல் தான் என்றான்.
நீ… எப்படியோ
இருந்துட்டுப்போ… எனக்கென்ன? என்னை ஏன் கடத்தி
வரச் சொன்னே… என்றாள்.
கண்ணே… கண்மணியே…
உன் அழகு… என்னைக் கொல்லுதடி… உன்னை நான் என் மனைவியாக ஆக்கத்தான்… என்றான்.
என்னை விட்டுவிடு…
இதற்கு நான் உடன்படமாட்டேன்… என்றாள்.
உன்னுடைய சம்மதத்தை
இங்கு யார் கேட்டது… உன் சம்மதத்தோடுதான் உன்னை அடைய வேண்டும் என்றால், உன்னை ஏன் கடத்தி
வரச் சொல்லப்போறேன்… சும்மா கத்தாதே… என்றான்.
எனக்கு உன்னைப்
பிடிக்கவில்லை… என்னை விட்டுவிடு… என்று அவனிடம் மன்றாடினாள் அந்த இளம் மங்கை.
நாட்டில் மக்கள்
எதற்கெதற்கோ மன்றாடுகின்றார்கள். அதில் பலர்
வெற்றியடைந்து திருப்தியடைகின்றனர். பலர் தோல்வி
கண்டு ஏமாற்றம் அடைகின்றனர். ஒருவனுக்கு ஆபத்து
வரும்போது அது எவ்வழியில், எதன் மூலம் வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படுது இல்லை. ஆக அவர்கள் தாம் எப்படியும் தப்பிக்க வேண்டும் என்ற
குறிக்கோளோடு தான் இருப்பார்கள். அந்நிலையில்
தான் அவன் எப்படிப் பட்டவன் என்று கவலை கொள்ளாமல் அவனிடத்தில் இருந்து தப்பிக்கவே அந்த
இளநங்கை முனைந்தாள்.
வெறி பிடித்த
ஒருவனுக்குப் பின்னால் நமக்கு ஓர் ஆபத்து இருக்கிறது என்று அறிந்தும், தவறு செய்யத்
தூண்டுகிறது அவன் மனம். இதனால் தீங்கிழைக்கும்
அவர்கள் வாழ்க்கை பாழாகிறதே என்று கவலை கொள்ளவே மாட்டான். ஆனால் அதேபோல அவனுடைய தங்கைக்கு இந்தத் தீங்கு ஏற்படும்
போது தானே உணர்கிறான். அதுவரை அவன் தன் ஆசையைப்
பூர்த்தி செய்யவே முயலுகிறான். அதுபோல தான்
அந்தக் கூட்டத்துத் தலைவன் நிலையும் இருந்தது.
எப்படி உன்னை
விட்டுவிடுவது… விடுகிறேன்… இந்தத் தாலியை உன் கழுத்தில் கட்டிக்கொள்… உன்னை விட்டு
விடுகிறேன்… அதன் பிறகு உன்னுடைய சம்மதம் இல்லாமல் உன்னைத் தொடமாட்டேன்… இப்போது இந்தத்
தாலி மட்டும் கட்டிக்கோ… என்று தன்னுடைய கால்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த தாலிக்கயிற்றை
எடுக்கிறான்.
ஐயோ! என்னை விட்டுடுங்க…
உன்னைப்போல ஒரு திருடனுக்கு வாழ்க்கைப் படறதைவிட ஆற்றிலோ குளத்திலோ உயிரை விடலாம்…
என்று மன்றாடுகிறாள்.
ஆற்றிலோ குளத்திலோ
உயிரை விடுறதற்கா உன்னை இவ்வளவு சிரமப்பட்டு கடத்தி வந்திருக்கேன்… நீ என்னை கல்யாணம்
பண்ணிக்கோ… இந்தத் தொழிலையே நான் விட்டுகிறேன்… என்றான்.
என்னால் முடியாது…
உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதை விட நான் சாவதே மேல்… என்று கூக்குரலிடுகிறாள்.
ஐய்யய்யோ! … நீ
சாவதா! … நீ செத்தால் நான் எப்படி வாழ்வது… என்றான் கர்வத்தோடு.
ஏன்?... இதோ இப்படி…
இந்தக் கள்ளக்கடத்தல் தலைவனா… எல்லோரையும் கஷ்டப்படுத்தும் கூட்டத்தின் தலைவனா… கருணையே
இல்லாத கல்நஞ்சுக்காரனா… பெண்மையை உணராத பொட்டையா… என்கிறாள்.
ஓ… அப்படியோ!
நீ சொல்லுகிறே… கண்ணு… நீ என்னைக் கல்யாணம்
செய்யச் சம்மதம் சொல்லு இந்தத் தொழிலையே விட்டுடுறேன்… உனக்கு நல்ல புருஷனா வாழறேன்…
என்றான்.
ஏய்யா!... ஊர்லே
எல்லோருக்கும் நல்லவனா வேஷம் போட்டுட்டு, இப்படி திருட்டுத் தனமா கள்ளத்தனம் செய்யறே…
உனக்கு மானம் ரோஷம் எதுவுமே இல்லையா… என்கிறாள்.
நீ… சொல்லு… உனக்காக இந்தத் தொழிலை விட்டுடுறேன்… என்னா கண்ணு சொல்லு…
என்கிறான்.
நீ மொதல்ல… திருந்துயா!
அப்புறம்… என்றாள்.
அப்புறம்… என்ன?...
இந்தத் தாலியை உன் கழுத்தில் கட்டிடுவேன் என்றான்.
யோவ்… மொதல்ல
நீ… நல்லவனா… ஊர் மெச்ச திருந்தி வாழப்பாரு… என்று வீர வசனம் பேசிப் புறப்பட்டாள் அந்தப்
பெண்.
அப்போது, பாரு
கண்ணு உன் கண் முன்னே நான் நல்லவனா வாழ்ந்து காட்டி உன்னை என் உரியவளா ஆக்குறேனா இல்லையா
பாரு… என்றான்.
போதும்யா! … வீர
வசனம் பேசுறத நிறுத்திவிட்டு திருந்தற வழியைப் பாரு… என்று ஆவேசமாக அவ்விடத்தை விட்டு
வெளியேறினாள்.
கண்ணு இந்தத்
தாலி உனக்குத்தான்… வேறு யாருக்கும் இது இல்லை… உன்னோடு தான் என் வாழ்வு. இல்லைன்னா… இல்லேன்னா என்பதே இல்லை… முடிச்சுக்
காட்டுறேன்… என்று பெருமூச்சோடு தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினான்.
என்ன என்ன அதிசயங்கள்
இந்த மாபெரும் உலகில் நடக்கிறது. நல்லவன் எல்லாம்
கெட்டவனாகின்றான். கெட்டவன் என்றும் நல்லவனாவது
இல்லை. அப்படி நல்லவனாகத் திருந்தினாலும் அவனை
மதிப்பவர்கள் யார்? நல்லவன் ஒருவன் தீய செயல்களைச்
செய்தாலும் அவனை இந்தச் சமுதாயம் அவனா இப்படிச் செய்தான், இருக்காது என்று குற்றத்தையும்
மறைக்கிறதே. சில நல்லவர்கள் என்ற திரையின்
பின்னால் நின்றுக் கொண்டு செய்யும் செயல்களுக்கு அவர்கள் தங்கள் தங்களது முதுகைப் பார்த்துக்
கொண்டால் தானே தெரியும். அதுபோலத் தானோ, இந்த
இளம் மங்கை, இவனா திருந்துவான் என்று சொல்லுகிறாளோ? இல்லை இவன் திருந்தினால் இவனையே
கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்லி இருக்காளோ?
இதில் எது உண்மை?
பாவம் அவன் திருந்திய பிறகு ஏமாற்றம் அடைவானோ! யார் கண்டார்கள். இந்தப் பெண்களின் மனதை யார்தான் புரிந்துக் கொள்ள
முடிகிறது. ஏன்? அவர்கள் மனதை அவர்களே நம்ப
முடிவதில்லை. பெண்களின் மனம் மென்மையானது. இளகியது என்பார்களே! அதுபோல, அவன் திருந்தியதும்
அவனைத் திருமணம் செய்துக் கொள்ளுவாளா! அப்படி
என்றால், இந்தத் திருமணத்திற்குப் பெற்றோர்கள் சம்மதிப்பார்களா! அல்லது எதிர்ப்பே தருவார்களா!
இவளுக்காகவே பிறந்தவன் ஒருவன் இருக்கிறான் என்று முடிவு செய்து இருக்கும் அந்த இளம்
பாலகன் அவனை என்ன செய்வாளோ! இந்தப் பெண்ணின் மனதைப் புரிந்துக்கொள்ள முடியலேயே! எப்படியும்
எதற்கும் ஓர் முடிவு உண்டு. பார்ப்போமே இவளது
முடிவு… என்ன என்று.
(3)
உலகிலே சிந்தனைகள்
பல விதம் உண்டு. ஒருவன் எதை எதைப் பற்றியெல்லாமோ சிந்தனை கொள்கின்றான். அதற்குத் தகுந்த விதம் அவனுடைய அறிவு செயல்படுகிறது. அறிஞன் ஒருவன் உலகில் உள்ள பொருள்களைப் பற்றியும்,
அது எவ்வாறு தோன்றியது, எப்படி செயல்படுகிறது, எப்படி இருந்தால் இப்படி நடக்கும் என்றெல்லாம்
சிந்திக்கின்றான்.
அதனாலேதான் அணு
முதல் கொண்டு கடுகு வரையிலான பல ஆராய்ச்சிகள்
செய்ய அவன் முயற்சிக்கின்றான், முயலுகின்றான். அதில் வெற்றியும் பெறுகின்றான்.
அதுபோல, திருடன்
ஒருவன் எப்படி இந்தப் பொருளைக் கைப்பற்றுவது என்பது பற்றித் தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பிக்கின்றான். நல்லவன் ஒருவன் என்ன செய்தால் இந்தச் சமூகத்திற்கு
நன்மை ஏற்படும், எந்த வகையான தீங்கு மக்களின் மையத்தில் உள்ளது, அதை எப்படிப் போக்குவது
என்று எல்லாம் தியாக மனம் கொண்ட ஓர் அரசியல்வாதி சிந்திக்கின்றான்.
இப்படி இருக்க
சிந்தனையும், கவலையும் அற்ற ஓர் பொருள், உயிர் உள்ள ஒரு பொருள் தான் உள்ளது. அதுதான் பச்சிளம் பாலகன். ஆனால் நம் கதையில் நாயகன் இளம்பாலகன் என்பதால் அவன்
சிந்திக்கின்றான்.
இதுவரை என் முகத்தையே
கண்டு காணாதது போல சென்று என்னுடன் பேசாது இருந்த இவளா? என்னுடன் பேசியது. இவன் பேசா மடந்தை என்று நினைத்தேனே. இவளா பேசா மடந்தை. இதுவரை என்னுடன் பேசாத இவள் இப்பொழுது பேசியதின்
காரணம். இதுவரை பேசச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையோ? அவள் என்னைக் காதலிக்கிறாளோ? இல்லை என்றால் அவள்
நான் முகம் அலம்பும் போது என்னையே உற்றுப் பார்க்கக் காரணம். சரி, எப்படியும் அவளைக் கேட்டு விடுவதே நல்லது. ஒருதலைக்காதல் எத்தனை நாளைக்குத்தான் நிலைக்கும். அப்போது அவன் சிந்தனை ஒரு நிலை அடையவே வயிற்றுப்
பசி எடுத்தது. பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தான். கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரவு ஏழு முப்பது இருக்கும். எழுந்தான் தன்னோட அறையின், இல்லை அது அறையல்ல வசந்த
மாளிகையில் இருந்து விடைபெற்று ஓட்டலின் வாசற்படியை மிதித்து சாப்பிட்டான். மீண்டும் வசந்த மாளிகையை அடைந்தான். அப்போது அங்கே,
வண்ணமகள் ஒருவள்
அந்த அழகிய எனது வசந்த மாளிகையில், செம்பவளக் கண்ணாள், மாமழையாள், அன்ன நடையாள் ஒருவன் வசந்த மாளிகையில்
என்னுடைய சோபாவில் அமர்ந்து இருந்தாள். இல்லை அது சோபா அல்ல, கட்டையால் செய்த பலகை. இருந்தாலும் அதற்குப் பெயர் சோபா.
வசதி படைத்தவன்
பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து உயர்ந்த ரக ஆடம்பரப் பொருள்களை வாங்கிப் பெருமை கொள்கிறான். பணத்தைத் தண்ணீர் என்றேனே? என்னை மன்னியுங்கள். தண்ணீருக்குப் படும் பாடு வீட்டுப் பெண்களுக்கு
அல்லவா தெரியும். வசதி இல்லாதவன் இருப்பதைக்
கொண்டு நல்ல வாழ்வு வாழ்கிறான். இவன் உயர்
ரக ஆசனப் பொருள்கள் வாங்க முடியவில்லை என்றாலும், இருப்பதற்கு அதன் பெயர் சூட்டி வைப்பதே
அவனுக்கு ஆனந்த வாழ்வு கொடுக்கிறது. இதுபோல,
தானோ என்னமோ மணியும் தன் அறையை வசந்த மாளிகை என்கிறான். இருக்கும் பொருள்களை உயர்ந்த ரகமாக எண்ணுகிறானோ. இல்லை இவைகளுக்கு வேறு யாராவது பெயர் வைத்து இருப்பார்களோ?
அந்தச் சோபாவில்
அமர்ந்திருந்த இளம்நங்கையாள் மெல்ல எழுந்து மணியை நெருங்கியதும், இது உண்மையா அல்லது
கனவா என்று சோதித்தும் பார்த்தான். ஆம் இது
கனவு அல்ல என்பதை உணர்ந்து வந்தவளை உபசரிக்க ஆரம்பித்தான்.
எப்ப வந்த ராதா…
என்றான். ஆம். அந்த வண்ணமகள் இளம்நங்கையின்
பெயர் ராதா.
ராதா… அப்பா,
அம்மா எல்லாம் எப்படி இருக்கிறார்கள்?
நன்றாக இருக்கிறார்கள்
என்பதற்கு அடையாளமாக தன்னுடைய கண் இல்லை நட்சத்திர விழியாலே பதிலலித்தாள்.
இந்த வண்ணமகள்
ஊமை அல்ல. இது அவளோட இயல்பு. ஊமைகள் எல்லாம் பேசத் துடிக்கும் போது இந்தக் காலத்தில்,
பேசும் ஆற்றல் பெற்றவர்களும் ஊமைகள் போலத் தான் சைகை செய்வது இயல்பாய்ப் போய்விட்டது.
இந்த ஆசைகள் சமூகத்தில்
எவ்வாறு எல்லாம் குடி கொண்டு இருக்கிறது. பணம்
படைத்தவன் பணத்துக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் ஆசைப்படுகின்றான். அதேபோல, ஏழை ஒருவன் தன் வருவாய்க்கு மேலே ஆசைப்படுகிறான். அவ்வாறு வரும் வருவாய் எந்த வழியில் எப்படி வருகிறது
என்பதைப் பற்றி அவன் சிந்திக்கும் ஆற்றலை அவன் ஆசைகள் அவற்றை அடியோடு தடுத்து விடை
கொடுத்து அனுப்பிவிடுகிறது. அதேபோல் தான் இந்த
வண்ணமகளும் ஊமையாக ஆசை கொள்கிறாளோ?
சாப்பாடு வாங்கி
வரட்டுமா… நான் சாப்பிட்டுட்டேன்… என்றான்.
அதற்கும் விழியாலே
பதில் ஆமாம் என்பது போல சமிக்ஞை செய்கிறாள்.
சற்று நேரத்திற்கு
எல்லாம் சின்ன அழகிய அமைப்பில் கொண்ட ஓர் சிறு உணவு விடுதியைக் கொண்டு வந்த களைப்பில்
உணவுப் பொட்டலத்தை அவளிடம் கொடுத்துவிட்டு கதைப் புத்தகம் ஒன்றை விரித்துக் கையில்
வைத்துக் கொண்டு கதையை ரசிக்கலானான்.
அதே சமயம், ராதா
உணவை உண்டு மணி படுக்கும் மெத்தை படுக்கை மீது படுத்துவிட்டாள். மெத்தை என்றால் பஞ்சு மெத்தை அல்ல. கயிற்றுக்கட்டில் தான். இதுதான் ஏழையின் ஆசையாயிற்றே.
கதையைப் படித்து
முடித்துவிட்டு படுக்கைக்குச் சென்ற அவன், அங்கு வண்ணமகளாய், மெல்லிய இடையாள், செம்பவளக்
கண்ணாள், அன்ன நடையாள், அவள் படுத்திருந்த கோலம்…
தாவணி மார்பகத்தைக்
காட்டிக் கொண்டும், தாவணியில் ஆங்காங்கு கிழிந்தும், பாவாடையும் அதே கோலத்தில் இருக்க
உடலில் ஆங்காங்கு கீரல் பட்டு மெல்லிய இடையாளின் உடலில் அது கத்தியால் வெட்டுண்டு இருப்பது
போல தெரிந்ததும், சற்று அதிர்ச்சி அடைந்தவன், பதறிப்போய் எழுப்ப, முன் வந்த அவன் அளவு
உறக்கத்திற்குக் கலங்கம் ஏற்படுத்தாமல் அவள் மேனியின் மீது தான் போர்த்திக் கொள்ளும்
துப்பட்டியைப் போர்த்தினானோ இல்லையோ, எங்குதான் பறந்து போனதோ அந்த பெண்ணின் தூக்கம். அவனைக் கண்டதும் தடுமாறியவள், தன்நிலையினைப் பின்
புரிந்துக்கொண்டு உடலைச் சரிசெய்து மூடிக்கொண்டு படுத்துக் கொண்டாள்.
மணி இப்பொழுது
தன் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தான். அப்போது
இரவு பதினொன்று.
இவள் எப்படி இந்த
நிலைக்கு வந்தாள். உடலில் வேறு கீரல்கள் இருக்கின்றன. ஆடைகள் கிழிந்திருக்கின்றன. வரும் வழியில் யாராவது இவளை… சே… அப்படி இருக்காது. வழியில் இடம் தெரியாமல் முட்களில் மாட்டிக்கொண்டு
கிழிந்து இருக்கலாம். இல்லை, இது கிழிந்தது
அவளுக்குத் தெரியவில்லை என்றால் ஏதோ ஆபத்தில் இருந்து தப்பி வந்தவள் போல அல்லவா இருக்க
வேண்டும். வந்ததிலிருந்து என்னிடம் ஒரு பேச்சும்
பேசவில்லை. சாப்பிட்டதும் ஆழ்ந்து உறங்கிட்டாளே,
இருக்கட்டும் எதுவாகிலும் காலையில் ஆபீஸ் போகும்முன் கேட்டுவிட்டால் போகுது என்று மனதை ஒருநிலைப்படுத்தி தூக்கத்தை வரவைக்க
அவன் பட்டபாடு… அது வந்தால் தானே நான் உனக்கு எளிதில் இன்றைக்கு வரப்போவது இல்லை என்று அது சொல்ல, இவன் வரவேண்டும் என்று சொல்ல கடைசியில்
சண்டையில் முடிந்து விழித்துப் பார்த்தால் காலை மணி ஒன்பது.
என்னங்க… எழுந்திட்டீங்களா?....
என்றாள்.
மணி என்ன?...
என்றான்.
ஒன்பது… என்றாள்.
ஆ… ஒன்பதா?
…. ஐயோ, எப்படி நான் ஆபீஸ் போவது. இன்னும்
ஒரு மணி நேரமே இருக்குதே. இந்நேரத்துக்கு போனால்
தானே பத்து மணிக்கு எல்லாம் ஆபீஸ் போக முடியும்… என்று புலம்பலோடு எழுந்தான்.
ஏன் ராதா? என்னை
எழுப்பக் கூடாது? நான் தான் தூங்கிட்டேன் என்றாலும்… என்றான்.
இந்த உரையாடல்களுக்கு
இடையே நிலவின் இடையே புகுந்த இருளைப் போல ஓர் மங்கையின் சிரிப்பொலியும், வரும் அதன்
காலடி ஓசையும் கேட்டு அப்பக்கம் திரும்பினான்.
சிரிப்பு என்ன?...
இதுவரை பாக்கியத்தோடு
பேசாதவன் இன்று முதன்முதல் அதுவும் எழுந்துக் கொண்டதும் பேசிவிட்டான். பேசியாவிட்டான் ஒரு கேள்வியே அல்லவா கேட்டுவிட்டான்.
சிரிக்காம என்னங்க
செய்யறது…
என்ன சொல்லுற
ராதா…
இன்றைக்கு லீவு
தெரியுமா உங்களுக்கு.
அப்படியா? யார்
பொறந்த நாள். யாராவது
சே… சே… உங்க
புத்தி அங்கையா போகணும்…
இன்று ஞாயிறு…
சார்…. ஞாயிறு. ஞாபகம் இருக்கா…
ஓ… நான் மறந்தே
போய்ட்டேன்.
நான் மறக்கலீங்க…
அதான் என்னை நிம்மதியாய்… ஒன்பது மணி வரை தூங்க விட்டு இருக்கிறாயே… அது போதாதா…
இப்போது மூன்று
பேரும் சிரித்த சிரிப்பில் வானில் இடி உறுமுவது போல இந்தச் சின்னஞ்சிறு மாளிகையில்
அதிர வைத்தது.
என்னங்க…
என்ன ராதா சொல்லு…
இன்னிக்கு அப்படி…
போனா போகுது…
எங்கங்கே…
அத்தா அப்படி
என்றாயே…
நான் சொல்ல வந்தது…
புரியுது ராதா…
இன்னிக்கு மெட்ராஸ் பூரா நமது தான்…
என்ன சார் நானும்
உங்களோட… உங்களுக்கு இடைஞ்சல் இல்லை என்றால் என்றாள் பாக்கியம்.
(4)
உலகின் பரந்த
பகுதியில் இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன.
ஆனால் இருட்டறையில் இருக்கும் ஒருவனுக்கு இரவும் பகலும் அந்த இருளைப் போலத்தான். குருடனுக்கும் அதே விதி தானே.
இப்பரந்த உலகில்
பசுமையே நாட்டின் வளர்ச்சி என்று உரிமைக்குரல் கொடுத்து செயல்படும் மக்களின் வாழ்க்கையில்
எத்தனை இன்பம்.
பசுமை கொண்ட வயலின்
அருகே ஒரு பிள்ளையார் கோயில். இதுதான் அந்த
ஊர் மக்களின் தெய்வம். ஆனால் அது செல்வத்திற்கும்
அவனுடைய கூட்டாளிகளுக்கும் சுரங்கப் பாதையின் வழியே அதுதான்.
அங்கு,
இரவைப் பகலாக்கும்
வண்ண விளக்குகள் எத்தனை, சமையல் அறை, படுக்கை அறை, ஆலோசனை அறை, வெளி வராண்டா, பூந்தோட்டம்,
சிறைச்சாலை, சிம்மாசனங்கள். இவற்றையெல்லாம் கண்டால் அது ஓர் அரசவைக் கூடம் என்றுதான்
சொல்ல முடியுமே தவிர சுரங்கப்பாதை என்று சொல்ல முடியாது.
பணியாட்கள் இங்கும்
அங்கும் உலாவிக் கொண்டும், அடாடா… அந்தக் காலத்தில் இப்படி ஒரு நாடு இருந்தது என்றால்
அதை நம்ப முடியாது.
மைசூர் அரண்மனை
போன்று கனமான தூண்களின் மேலே அமைந்த சுவடுகள் (ஓவியங்கள்) வண்ண வண்ண நிறங்களில் மின்னியது. இருளைப் போக்கியது. இந்தப் பரந்த இடத்தில் ஓர் உயர்ந்த இராஜ சிம்மாசனத்தில்
செல்வன் உட்கார்ந்துக் கொண்டும், அமைச்சர்கள் வரிசையில் அவனுடைய கூட்டாளிகளும், காவலாளிகளும்
அவன் கீழே போடப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தனர்.
முதலாளி நீங்க
இப்ப எங்களைக் கூப்பிட்டது…
ஓர் நல்ல விஷயத்திற்காகத்தான்…
நல்ல விஷயமா?
ஆமாம்டா… இதுவரை
நாம் எத்தனையோ கொலை, கொள்ளை அடித்திருக்கிறோம்.
அதற்கு நமக்குத் தேவையான பொருளும் கிடைத்து விட்டது.
அதனால்,
அதனாலே, இனி இந்தத்
தொழிலை விட்டுவிட்டு அவங்க அவங்க ஒரு தொழிலைச் செய்துக் கொண்டு…
என்னடா… தலைவருக்குப்
புத்தி மொரண்டு போய்ட்டுதா…
ஆமாண்டா… அப்படித்தான்
தெரியுது…
தலைவர் நம்ம சட்டத்தை
மறந்துட்டாரோ…
மறக்கவில்லை. நண்பர்களே… இனி நாம் எல்லோருமே இத்தொழிலை விட்டுடலாம்
என்றால்…
அதெப்படி உன்
வசதிக்காக எங்கள் தொழிலை விட்டுடச் சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு…
நான் உனக்குத்
தலைவன்…
தலைவன்… அதெல்லாம்
நீ எங்களோடு ஒத்துழைத்தப்போ…
அப்படியா…
ஆமாம்…
சரி. என்னிடம்
யாரும் பங்கு கேட்காம போங்க…
அதெப்படி முடியும். எங்க பங்கை கொடுத்திடு நாங்க போய்க்கிறோம்…
அது நான் உயிரோட
இருக்கிற வரை நடக்காது…
டேய்… இவனைப்
பிடித்து சிறையிடுங்கள். எப்படி சொல்லாத போய்டுறான்
பார்க்கலாம் என்று கட்டளை இட்டான். அந்தக்
கூட்டத்துத் துணைத்தலைவன் துரை.
நல்லவர்கள் எல்லாம்
தீயவர்கள் ஆவது எவ்வளவோ சுலபம். ஆனால் தீயவன்
ஒருவன் இந்தச் சமுதாயத்தில் நல்லவனாக வாழ்கிறான். அதே தீயவன் ஒருவன் நல்லவனாக வாழ விரும்பினால்
அவன் சுற்றத்தார் அவனை விடுவதில்லை. அவற்றையும்
மீறினால் கொடுமைகள் பல நேரிடுகிறது.
இரவையும் பகலையும்
ஒன்றாகக் கொண்ட அந்த இடத்தின் ஒதுக்குப்புறமும், பாதுகாப்பான பகுதியும், காற்றே இல்லாத
இருளில் மூழ்கி இருந்த இடத்தில் செல்வத்தைச் சிறை வைத்தனர்.
இதுவரை சுதந்திரமாகச்
சுற்றி மற்றவர்களுக்குக் கட்டளை இட்ட அவன், இன்று அவன் மாற்றான் கட்டளைக்குப் பணியாளாய்
சிறைப்பட்டு இருக்கிறான். மற்றவர்கள் அவதியை
மட்டுமே கண்ட அவன் இன்று தனக்கு ஏற்பட்ட இந்த சிறைக் கொடுமையைக் கண்டு மனம் வருந்தலானான்.
சுதந்திரப் பறவை
ஒன்றைப் பிடித்துக் கூண்டில் அடைத்து வைத்தால் அது எப்படியும் அவற்றில் இருந்து மீண்டு
போக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டேதான் இருக்கும். அதுபோல தான் சிறையில் இருக்கும் செல்வம் தன்நிலை கொள்ளாது அந்த இருட்டுப்
பகுதியில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டு தப்பிக்க சிந்தனை செய்துக் கொண்டு சுற்றி
இருந்தவன், திடீரென்று நின்று தன் சுற்றுப்புறத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று
ஒரு முடிவுக்கு வந்தவன் போல அவன் முகத்தில் ஓர் தெம்பு உள்ளத்தில் ஓர் இளமைத் துள்ளல்,
உடலில் கலகலப்பு.
சுற்றும் முற்றும்
ஒரு முறை பார்த்துக் கொண்டு சுவற்றின் ஒவ்வொரு மூலையாய் தடவிக் கொண்டு வந்தான். ஒவ்வொரு மூலையும் தடவும்போது அவன் முகத்தில் ஏமாற்றத்தையே
கண்டபோது, அவன் நினைத்தது கிடைக்கவில்லை என்று புலப்பட்டது. கடைசியில் ஒரு மூலையில் அவன் தேடியது கிடைத்ததோ
என்னமோ? அவன் முகத்தில் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு
அளவே இல்லை.
மீண்டும் ஒரு
முறை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு அந்த இருட்டிலும் ஓர் வெள்ளை பட்டன் போல
இருந்த அந்த சுவிட்சை அழுத்தியதும், சுரங்கப்பாதையில் இருந்து வெளியே செல்லும் வழிக்கான
கதவு திறந்து வழிவிட்டது. அவ்வழியே வெளியே
வந்தவன், சுற்றும் முற்றும் பார்த்தான். அது
ஒரு வறண்ட பாலைவனம் போல காணப்படும் ஆற்றுப்பகுதி.
ஆள் நடமாட்டம் இல்லாததால் அந்தப் பொழுதை அங்கே ஓர் மரத்தின் மேலே போக்கிவிட்டு
இரவு இடம்விட்டு இடம் போய்டலாம் என்று எண்ணித் திரும்பினான்… அங்கே,
ஆற்று வெள்ளத்தில்
இருந்து தப்பி கிணற்றில் விழுந்தவன் போல எதிரே நின்ற உருவைக் கண்டு பயந்த நிலை கொண்டவன்,
அவ்வுருவை நோக்கி மெல்ல நடக்கலானான்.
அவ்வுருவம் மெல்லிய
கோல் ஒன்றையும், காக்கி முழு நிஜாரும், சர்ட்டும் அணிந்து, தலையில் நான்தான் போலீஸ்
அதிகாரி என்று அடையாளம் காட்டும் அரசாங்க முத்திரை பதித்த அந்த மனிதன் ஓர் போலீஸ் அதிகாரி என்று நினைக்க ஓர் நிமிடம் கூட ஆகவில்லை.
செல்வம் அவருடைய
கையைப் பற்றிக் கொண்டு ஏதேதோ அவரிடம் சொல்லி மன்னிப்புக் கேட்டான். அதற்கு அவரும் ஆதரவு தருவதாகத் தலையசைத்து அவர்
முதுகில் தட்டிக் கொடுத்து அவனை அழைத்துக் கொண்டு சென்றார்.
(5)
உலகில் நாம் ஒன்று
நினைக்க அது ஒன்று நடக்கிறது.
பச்சை பசேல் என்று
நெல் வயல்கள். எங்கும் பரவி அந்த இடத்தைப்
பசுமைக் கோலத்தைக் காட்டியது. அதைச் சுற்றி
உயர்ந்த மலைகளும், அவற்றின் இடையே கரைபுரண்டோடும் ஆற்றோடையும் அமைந்து, எங்கும் பசுமை
கொண்ட அந்த இடத்தின் மையத்தில் வையாபுரி என்ற கிராமம் இருந்தது.
இருப்பது குறைந்த
வீடுகள் என்றாலும் வீதிகளெல்லாம் தென்னை மரங்களும், ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் ஓர்
சிறு பூஞ்சோலை அமைந்து அந்த இடத்தின் பெருமையை உயர்த்தி நின்றது. அந்த வையாபுரி கிராமம் தான் நம்முடைய மணியின் தாய்
தந்தையர் வசிக்கும் இல்லமும் அமைந்து உள்ளது.
மாலை வெயிலில்,
பூஞ்சோலையின் மனம், தென்னை மரத்தின் நிழல்கள், அந்த இடத்தில் வெயிலே இல்லாமல் எப்பொழுதும்
குளிர்ந்த மணம் கமழும் காற்றை அள்ளி மக்களுக்கு அளித்து பெருமை கொண்டு வீதியில் காவலாய்
அமைந்து இருந்தது.
இந்த நேரத்தில்
மக்கள் வயலுக்குச் சென்று தன்னுடைய ஏர்க்கலப்பை, மாடுகளை ஓட்டிக் கொண்டும், அவர்களோட
பிள்ளைகள் அவற்றின் சிறு வைக்கோல் கற்றையை எடுத்துக் கொண்டும், அவர்களோடு பிள்ளைகளைப்
பெற்ற தாய்மார்கள் தன் கணவனுக்கும் சேய்களும் மதியம் சமையல் செய்து எடுத்துச் சென்ற பொருட்களை எடுத்துக்கொண்டும்
ஒவ்வொருவரும் வருவது போருக்குச் செல்லும் வீரர்களைப் போல் அல்லவா இருக்கிறது.
வீட்டிற்கு வந்ததும்
அவர்கள் கணவர்களுக்கும், சேய்களையும் குளிப்பாட்டி, சாப்பிட்டுவிட்டு தெருத்திண்ணையில்
வந்து அமர்ந்து சந்தோஷமாய் பேசிக்கொண்டும், அந்த ஊரின் மணம் கமழும் காற்றைச் சுவாசித்து
இன்புற்று இருந்தனர்.
அந்த ஊரில் உள்ள
ஒரு வீட்டு முற்றத்தில் மணியின் தாய் மங்கம்மாவும், அவனுடைய தந்தை மாணிக்கமும் பேசிக்
கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள்…
என்னங்க…
என்ன மங்கை…
நம்ம ராதா போய்
சேர்ந்திருப்பாளா? இல்லே…
ஆமாம்… நேற்றே
போய்ட்டு இருப்பா…
என்னங்க…
என்ன… கொழ கொழ
என்று பேசாம நேரா கேட்டுடு மங்கை…
இல்லே… நம்ம பையன்
மணிக்கு…
மணிக்கு என்ன
இப்ப…
மணிக்கு ஒண்ணுமில்லீங்க…
அவனுக்கும் வயது ஆகுது. அவனுக்கென்று காலா
காலத்தில் ஒரு கல்யாணத்தை….
ஓ… கல்யாணத்தைச்
சொல்லுறீயா?
ஆமாங்க... நம்ம
ராதாவுக்கும் மணிக்கும்…
என்ன… ராதாவுக்கும்
மணிக்குமா?...
ஆமாங்க…
ஏண்டி உனக்கு
என்ன பைத்தியமா பிடித்து இருக்கிறது.
இல்லீங்க… அவனும்
அவளும் நல்லா பழகுறாங்க…
ஏண்டி பழகனாவே
அவங்க காதலிக்கறாங்க என்று நினைப்பதா? அவன்
அவளை தங்கை போல பார்ப்பது உனக்குத் தெரியலே…
அவன் என்ன நமக்குப்
பிறந்த பொண்ணா அவனுக்குத் தங்கையாக…
அப்படி இல்லே
மங்கை ஒரே வயிற்றில் பிறந்தால் தான் அண்ணன் தங்கை என்பதில்லை. மனதில் வைத்துக் கொண்டாலே அது போதும் இந்த உறவுக்கு.
இருந்தாலும் அவனை…
சரி. உன் விருப்பப் படியே அவனைக் கேட்டுக் கொண்டு தொலை…
என்னங்க என்மேல
கோபமா?
பின்ன நான் சொல்லுகிறேன்
நீ நம்ப மாட்டேன் என்கிறாயே?
அப்ப… அவனுக்குப்
பெண்ணைப் பாருங்க…
மங்கை, நம்ம பையன்
புத்திசாலி. அவன் வாழ்க்கைக்குத் தகுந்தவளைக் கூட்டிக் கொண்டு எப்படி வருகிறானோ? அப்பதான் அவனுக்குக் கல்யாணம்.
இந்த நாட்டினிலே
எத்தனை அற்புதங்கள் நடைபெறுகின்றன. ஓர் தந்தையின்
விருப்பப்படி நடக்கும் பிள்ளைகள் எத்தனை பேர்.
பிள்ளையின் விருப்பமே தங்களது விருப்பம் என்று அவன் மகிழ்ச்சியைக் காணவிரும்பும்
பெற்றோர்கள் எத்தனை பேர். பெற்றோர்களின் விருப்பம்
ஒருபுறமும் பிள்ளையின் விருப்பம் ஒருபுறமும் இருந்து பெற்றோர்க்கு மதிப்புக் கொடுத்து
தன் வாழ்வை அர்ப்பணிப்பவர்கள் எத்தனை பேர்.
பிள்ளைகளின் விருப்பப்படி நடக்காத பெற்றோர்கள் தன் பிள்ளையை இழக்கும் நிலையில்
எத்தனை பேர். அவன் வாழ்க்கைத் துணைவியோடு வீட்டைவிட்டு
ஓடிவிடும் இளம் கன்றுகள் எத்தனை. இத்துணையிலும்
முக்கியமாக தம் பிள்ளையை நம்பி அவன் வாழ்வு அவனுக்கே தெரியும் என்று எண்ணி அவன் இன்பம்
தம் இன்பம், அவன் மகிழ்ச்சியே தங்கள் மகிழ்ச்சி, அவன் வாழ்வே தங்கள் வாழ்வு என்று எண்ணும்
பெற்றோர்கள் சிலரே.
(6)
ஒருவருக்கு ஒருவர்
உதவி செய்து வாழ்வதே மனிதனின் இயல்பு. அதுபோல,
மணி அடுப்படியில் ராதாபடும் கஷ்டத்தைப் பார்த்து, என்ன ராதா நானும் உதவிக்கு வரலாமா?
அதெல்லாம் வேண்டாங்க…
தனியா கஷ்டப்படறீயே…
பரவா இல்லீங்க…
தேவைப்பட்டால் கூப்பிடுறேன்.
உதவிகள் எத்தனை
விதத்தில் அமைந்துள்ளது. ஒருவன் உதவி செய்கிறேன்
என்று முன்னுக்கு வந்தால் அதைப் பெற்றுக் கொள்பவன் அவனைவிட ஓர்படி தாழ்ந்து இருக்க
வேண்டும். அப்படி இருந்தால் அவன் செய்யும்
உதவிக்கு மகிழ்ச்சியடைவான். அப்படி இல்லையேல்
உனது உதவி எனக்குத் தேவையில்லை என்று சொல்லும்போது
உதவி செய்ய வந்தவன் ஒருபடி கீழிறங்கி இகழ்ச்சி அடைகிறான். அதுபோல, தானே இப்போது மணியையும் வாயால் மறைமுகமாக
இராதா இகழ்ந்துவிட்டாள் என்று மனக் கஷ்டப்பட்டாலும் ஒருபுறம் தான் ஒரு ஆண்பிள்ளை எப்படி
பெண்களின் வேலையில் உதவி செய்ய முடியும் என்று தன் மனதை தேற்றிக் கொண்டான்.
சாப்பாடு முடிந்ததும்
சாப்பிட்டுவிட்டு மணி ஓர் கதைப் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு படிக்கலானான்.
வேலை இல்லாத ஒருவன்
ஒரு நாளைக்குப் பொழுதைப் போக்குவது என்றால் தாய்சேய் பெறும் கஷ்டத்தைவிட பன்மடங்கு
அதிகமாகும். இதனால் பலர் இக்கட்டான நிலைக்கு
ஆளாகின்றார்கள். பொழுது போகவில்லையே என்று
ஒருவன் வீதியில் செல்லும் ஒரு பெண்ணைக் கிண்டல் செய்கிறான். அவளோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால்
அவன் பிழைத்தான். அவள் அவற்றை முக்கிய விஷயமாக
எடுத்துக் கொண்டு போலீஸ், கோர்ட்டு என்று எல்லாம் அலைய வேண்டி இருக்கிறது. அதைவிட வேலை எல்லா சமயத்தில் பொழுதைப் போக்கவே பத்திரிகைகள்
பல வார இதழாகவும், மாத இதழாகவும், நாளிதழாகவும் வெளிவருவது எவ்வளவு நன்மை அளிக்கிறது. அதனால் தானோ மணி கதைப் புத்தகத்தை விரித்துக்கொண்டான்.
அதேபோல்,
வேலை இல்லாத ராதா
என்ன செய்வாள். அவள் அடுத்த அறையில் இருக்கும்
பாக்கியத்திடம் சென்று பேச ஆரம்பித்து தன் பொழுதைப் போக்கச் சென்றாள்.
அவர்கள் பேச்சு
தொடர்ந்தது
என்ன ராதா போரடிக்குதா…
ஆமாம்… பாக்கியம்…
சரி. அதென்ன உடம்பெல்லாம்
கீறல், இரத்தம் வடிந்து கட்டி இருக்கிறது.
அதெல்லாம் ஒண்ணுமில்லே…
சொல்லுடி பரவாயில்லை…
அதான் ஒண்ணுமில்லேன்னு
சொன்னே… இல்லே…
ஏண்டி… இராத்திரி
மணி ஏதாவது தகராறு பண்ணாறா?...
அடிச்சீ… உம்புத்தி
அங்கேயா போகணும். அவரை நான் என் கூட பிறவா அண்ணன் போல கருதுகிறேன் டீ. அவரும் என்னை அதுபோலவே கருதுராரு. அந்த நல்லவர் மேல் பழியைப் போடாதேடி…
அப்படி என்றால்
எனக்கு உரிமை கொடுத்திட்டே…
என்னடி சொல்லுரே…
ஒண்ணுமில்லே…
இது எப்படி வந்தது…
கவனம் எல்லாம்
புத்தகத்தில் பதிந்து இருந்த மணி தன் பெயர் அவர்கள் பேச்சில் உரசுவதைக் கண்டு தன் படிப்பை
விட்டுவிட்டு அவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கேட்க ஆரம்பித்தான். ஒட்டுக் கேட்பது தவறுதான் என்றாலும் தன்னைப் பற்றிப்
பேசும்போது எப்படி சும்மா இருக்க முடியும்.
அவன் தனது கவனத்தை எல்லாம் அவர்கள் உரையாடலைக் கேட்க தன் செவிக்குக் கூர் தீட்டி
செயல்பட வைத்தான்.
பள்ளியின் சுவரோரம்
ஒட்டுக்கேட்டு அறிவை வளர்க்கும் ஏழை மாணவர்கள் எத்தனை பேர். காதலர்கள் பேச்சை ஒட்டுக் கேட்பவர்கள் எத்தனை பேர். இப்படி நல்லதுக்கும் தீயதுக்கும் ஒட்டுக் கேட்கிறார்கள். தன்னைப் பற்றிப் பேசுவதை ஒட்டுக் கேட்பதில் தவறு
இல்லை என்று ஊகித்துக் கொண்டான் மணி.
அதெல்லாம் சொன்னால்
இன்றைக்கு எல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
அப்படி என்னடி
அது…
ஆமாமாம். பாக்கியம்
அது என் வாழ்க்கையை அனுசரிச்ச விஷயம்…
அப்படியா, சொல்லுடி
கேட்போம்…
பாக்கியம், இப்ப
அதைப்பற்றி எல்லாம் கேட்காதே. வேற ஏதாவது பேசலாமே…
சொல்லு ராதா…
பாக்கியம் சமயம்
வரும் அப்போது நானே உனக்குச் சொல்லுகிறேன்.
இதைப் பற்றி பேசினால்
இராதாவுக்கு மனக்கஷ்டம் ஏற்படுகிறது என்று நினைத்து பேச்சை மாற்றிய பாக்கியம், நீ இவருக்குச்
சமைக்கவே வந்துட்டீயா?...
ஆமாம்டி… கடிதம்
எழுதி இருந்தாரு…
கடிதமா… என்னடி
சொல்லுரே…
அவருடைய அப்பாவிற்கு
எழுதினாரு…
அப்படியா, நான்
என்னமோ என்று பயந்து போய்ட்டேன்…
நீ எதற்குடி பயப்படனும்…
உம்…. சொம்மா
தான்…
என்ன எழுதினாராம்…
ஓட்டல் சாப்பாடு
பிடிக்கலையாம்… சமைத்து சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதற்கு சமைக்க எனக்கு ஒருவர் உதவிக்கு வேண்டும்
என்று எழுதினாராம்.
அதற்கு நீ வந்தியாக்கும்…
பின்னே யார் வருவதாம்…
அடி பைத்தியமே…
ஏண்டி… அண்ணனுக்குக்
கஷ்டம் என்றால் தங்கை தானே உதவனும்…
அதுசரி. அவரு வாழ்க்கைக்கு உதவியாளரைக் கேட்டால்…
அதெப்படித் தெரியும்
உனக்கு…
இது கூட தெரியனுமாக்கும். அவரு எழுதின கடிதமே அப்படித்தானே…
பகீர் என்றது
மணிக்கு. என்னடா இது பட்டென்று நம் உள்ளத்தில்
இருந்ததை அப்படியே சொல்லிவிட்டாள் என்று பயந்து அவர்கள் பேச்சைத் தொடர்ந்து கேட்க தன்
நிலையை சமாளித்துக் கொண்டான்.
அப்படி என்னடி
இருக்கு…
ஓட்டல்லே சாப்பாடு
பிடிக்கலே… சமைத்துப்போட ஒரு உதவியாளர் என்றால் இன்னுமா புரியலே…
ஆமாம்டி… அப்படியும்
இருக்குமோ…
இதுகூட தெரியவில்லையாக்கும். அவங்க அப்பாவுக்கு…
நான் என்னடி செய்யட்டும்
அப்பா அம்மா இல்லாத என்னை அனாதை என்று சொல்லாமல் தன் மகளாகவே எண்ணி வளர்த்தவர்கள்.
கட்டளை இட்டால் நான் பணியாற்றுவது தானே என்
கடமை…
அடி போடி… உன்
கடமையும் நீயும்… அவரு ஆசையை கெடுத்திட்டியேடி…
பாக்கியம் அவரு
பற்றியே கேட்கிறாயே… அப்படி என்னடி உனக்கு அவரு மேலே அவ்வளவு அக்கரை…
அவரு மேலே எனக்கு…
எனக்கு… என்ன அக்கரை அப்படி ஒண்ணுமில்லேயே…
ஏண்டி மறுக்காதே…
நீ அவரை காதலிக்கறியா… இல்லியா…
போடி ராதா, இதை
எல்லாம்… என்று மெல்ல கண்ணத்தில் கிள்ளிவிட்டு எழுத்து சென்றுவிட்டாள் பாக்கியம்.
திடீரென்று அவர்கள்
உரையாடல் நின்றுவிடவே, அவர்கள் பேச்சை ஆராயத் தொடங்கினான். பாக்கியம் என்னைப் பற்றியே வேசுவதற்கான காரணம் என்ன?
அதைப் பற்றி ராதா கேட்கும் போது ஏதேதோ சொல்லி மழுப்பிப் பேச்சை மாற்றினாளே…
கடைசியாகவும்
பாக்கியத்தை ராதா கேட்டபோது அவள் என்ன சொன்னாள் என்றே தெரியவில்லையே… என்று தன் சிந்தனையில்
இருந்து மீண்டு திரும்பினான்… அப்போது,
என்னாங்க கதை
படித்திட்டீங்களா…
ஆம்…. கதையா…
ஆம்… கதையை படித்திட்டேனே…
கதை எப்படி இருக்குங்க…
நல்லா இருக்கா…
நல்லா இருக்கு
ராதா… பீச்செல்லாம் போய்ட்டு வரலாம். பாக்கியம்
வர்றேன் என்றாளே… தயாரா இருக்கச் சொல்லு ராதா.
(7)
நல்லவர்களுக்கு
என்றுமே எதிர்காலம் உண்டு என்பார்கள். ஆனால்
தீயவர்களுக்கு எப்போதும் தண்டனை உண்டு என்பார்கள். அந்நிலையில் தான் டாக்டர் செல்வம் இப்போது தன்னுடைய
டாக்டர் பதவியை விட்டுவிட்டு வெறும் செல்வம் என்ற பெயரில் தன்னுடைய கம்பீரமான தோற்றத்தைக்
காவல் நிலையத்தில் அர்ப்பணித்த வண்ணம் போலீஸ் கமிஷ்னர் முன் கைகட்டி, வாய் பொத்தி,
உடல் நடுங்க தன் அழகிய முகத்தில் சோகக் கலைகள் வீசத் துன்பத்தோடு அவர் முடிவை எதிர்நோக்கும்
வண்ணம் செல்வத்தோட செவியைக் கூர்மையாக்கிக் கொண்டான். அப்போது,
மிஸ்டர்… செல்வம்
நீங்கள் ஏன் இந்தத் தொழிலில் ஈடுபட்டால்…
எல்லாம் பசியின்
கொடுமைதான் சார்…
நீ எப்பொழுது
இந்தக் கூட்டத்தில் சேர்ந்தாய்…
சார். நான் சின்ன
வயதாக இருக்கும் போதே வீட்டைவிட்டு ஓடிப்போய்ட்டேன்… அப்போது கள்வர்கள் கையில் சிக்கிக்
கொண்டு…
மிஸ்டர்… செல்வம்
நீ இவ்வளவு நல்லவனாக இருந்தும் அந்தக் கூட்டத்தில் தொடர்ந்து ஏன் இருந்தாய்?...
நான் கொள்ளையடிப்பதில்
ராஜா என்று எங்கள் தலைவரே எனக்குக் கொடுத்த பட்டப் பெயர். அவரே நான் விடுதலை கேட்கும் போது எல்லாம் எதையெதையோ
சொல்லி என்னை… என் ஆசையை எல்லாம் கட்டுப்படுத்தி விடுவார். அவர் இறந்ததும் அந்தக் கூட்டத்துத் தலைவனானேன். அப்போதும் தப்பிக்க எங்கள் கூட்டாளிகள் விடவில்லை. என்னைச் சிறையில் அடைத்தார்கள். அங்கு இருந்து தப்பி வந்த போதுதான்…
நான் பார்த்தேன்…
அது சரி இப்போது உனது திட்டம் என்ன?
சார். நான் கொள்ளயடித்த
பொருள்கள் எல்லாம் என் வசம் தான் இருக்கிறது.
அதை எல்லாம் தங்களிடம் ஒப்படைத்து விட்டுவிட்டு நிம்மதியாக சிறையில் இருப்பதோ
நான் செய்த கொடுமைகளுக்குத் தண்டனை…
அதுசரி… உனக்குத்
தெரிந்தவர்கள் உறவுக்காரர்கள்… யாராவது நினைவு இருக்கிறதா…
இருக்கிறார்கள்
சார்… என் அப்பா… அம்மா… என் அருமைத் தங்கை ஒருத்தி இருக்கிறார்கள் சார்… ஆனால்…
ஆனால் என்னப்பா
சொல்லு…
அவர்கள் உயிரோடு
இருக்கிறார்களா, அப்படி இருந்தாலும் அவர்களை எப்படி சார் கண்டு பிடிப்பேன்…
மிஸ்டர்… அதைப்
பற்றி நீ கவலைப் படாதே. அதற்கு நாங்கள் இருக்கிறோம். உங்கள் அப்பா பெயர் நினைவு இருக்கிறதா?...
நினைவா…. மறக்கமுடியாத
பெயராச்சே…
என்னப்பா சொல்லுகிறாய்…
ஆமாம் சார்… முருகனுக்கு
ஒண்ணுக்கு ஒண்ணு வட்டிகாக இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். அவருடைய பெயரும் தொழிலும் மறக்கமுடியுமா?... வட்டிக்கார
வேலன் சார்…
வேலனா… உங்க அப்பா…
ஆமாம் சார்…
நீ எதற்கு அவர்களை
விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டாய்…
எங்கப்பா வட்டிக்கு
வட்டி வாங்குவது களங்கம் ஏற்படுத்துவது எல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. அதை நான் எங்கப்பாவைக் கேட்டேன். அவருடைய அந்தத் தீய செல்வத்தில் வாழாத நான் வீட்டை
விட்டு வெளியேறி…
இவர்கள் கையில்
சிக்கிக் கொண்டேன் என்கிறாய்...
அப்படியே தான்
சார்..
உங்க அம்மா பெயர்…
தங்கை பெயர் நினைவு இருக்கா….
சார்… எனக்குப்
பத்து வயது இருக்கும் போது இவர்களை விட்டுப் பிரிந்தேன். எங்கம்மா பெயரும் வள்ளி, தெவானை. இந்த இரண்டில் ஒன்று. ஆனால் என் ஆசைத் தங்கை… அன்புத் தங்கை பெயர் பாக்கியம்…
சார் அவளைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா சார்… நான் சாவதற்கு முன் அவர்களைப்
பார்க்க முடியுமா சார்…
மிஸ்டர்… செல்வம்
கவலைப்படாதே… நீ யார் என்று இப்போது எனக்குத் தெரியும். உங்கள் அப்பாவும், தங்கையும் கூட எனக்குத் தெரியும்…
சார்… எங்கள்
அம்மா…
மன்னிக்கவும்
செல்வம்…. என்னை யார் என்று நீ சொல்லு… அன்று நீ வீட்டை விட்டு ஓடும்போது உன்னைத் தடுத்து
எங்க செல்வம் போறே என்று கேட்ட அந்த…
ராஜீ… மாமாவா
நீங்க…
ஆமாம் தம்பி…
அதே ராஜீ மாமாதான். கான்ஸ்டபிலா இருந்து போலீஸ் அதிகாரியா பதவி உயர்வு கிடைத்திருக்கு…
மாமா… எங்கம்மா
எப்படி இருக்கிறார்கள்…
செல்வம் அது…
வந்து…
என்ன மாமா… எங்கம்மாவுக்கு…
செல்வம் உங்கம்மா
பூவும் பொட்டோட போய்விடக் கொடுத்து வைத்த உத்தமப் பெண். உன் பிரிவு தாங்காத உன் தாய் நீ சென்ற பத்து நாட்களுக்குள்…
ஐயோ… நான் எப்பேர்பட்ட
கொடியவன் சார்… எனக்குத் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுங்க… நானும் இப்பூவுலகில் வாழ்ந்து
என்ன, வீட்டில் தாயைக் கொன்றேன்… நாட்டில் பலர் வயிற்று எரிச்சலை வாங்கிக் கொண்டேன்.
நான் இன்னும் உயிருடன் இருப்பதா… தவறு எனக்குத் தூக்குத் தண்டனை போதாது… அங்கம் அங்கமாக சித்தரவதை செய்து என்னைக் கொன்றாலும் அந்தப் பாவம் என்னை விட்டு
நீங்காது…
செல்வம் நீ உயிருடன்
இருப்பது உங்கள் அப்பாவிற்குத் தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படும். அதைவிட உன் தங்கைக்குத் தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படும்…
சார்… இன்னும்
என்னை சித்திரவதை செய்யாதீர்கள்… நான் அவர்களைப் பார்ப்பதைவிட சாவதேமேல்…
தம்பி உன்னுடைய
இப்பொழுது நன்னடைத்தைக்கு அரசாங்கமே உனக்கு ஓர் வேலை கொடுத்து ஆதரிக்கும். நீ உன்னோட கூட்டாளிக் கும்பலை பிடித்துக் கொடுத்தால்…
அதற்கு இப்பொழுதே
நான் தயாராக இருக்கிறேன் சார்…
இப்பொழுது, அவர்கள்
கையும் களவுமாக பிடிக்க சந்தர்ப்பம் ஏற்படும்… புறப்படு என்னோடு…
கார் காவல் நிலையத்தை
விட்டுச் சென்னை மௌண்ட் ரோடு வழியாக வானத்தில்
விமானம் தடையின்றி முன்னோக்கிச் செல்லும்.
ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமான மௌண்ட் ரோடு வழியில் அவ்வாறு செல்ல
முடியுமா… வண்டி பல வழியில் பிரியும் இடம் வந்தால் நின்று போக வேண்டிய நிர்ப்பந்தம். முன்னே செல்லும் வட்டிகள் பஸ்கள் பல, ஸ்கூட்டர்கள்
பல, சைக்கிள்கள் பல, மாட்டு வண்டிகள், கார்கள், வேன்கள் இப்படிப் பல நிமிடத்திற்கு
ஓர் இடத்தில் இரு நூறுக்கும் மேற்பட்ட வண்டிகள் பறவைக் கூட்டம் போல ஊர்ந்து சென்றுக்கொண்டு
இருக்கும். அந்தச் சாலையில் காவல் நிலைய வேன்
ஒன்றும் ஊர்ந்து சென்றது. அதில் செல்வமும்,
ராஜீ இன்ஸ்பெக்டரும் இருந்தனர். சிக்னல் வந்ததால்
இவர்கள் சென்றுக் கொண்டு இருந்த வேன் நிற்க நிர்ப்பந்தம் உண்டாகியது. அப்போது,
மாலை வெயிலில்
சூரியக் கதிர்களின் கொடுமை தளர்ந்து மென்மையான இதமான வெப்பத்தை அளித்துக் கொண்டும், கடற்கரைக்கு அருகில் இருப்பதால்
இதமான கடற்காற்றும் அந்த மாலை நேரத்தில் உடல் முழுவதும் ஒருவிதத் தெம்பு ஏற்பட்டது. சாலையில் ஓரங்களில் பல இடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள்
நகரப் பேருந்துக்காக பேருந்து நிற்கும் இடத்தில் கூட்டமாக இருந்தனர். அதில் எத்தனை வகையான மக்கள் இருக்கின்றனர். பொழுதைப் போக்குவதற்காக பல இடங்களுக்குச் செல்லும்
மக்கள், சினிமாக்கள் என்றும், பீட்ச் என்றும், மளிகைக் கடைகளுக்குச் செல்பவர்கள் என்றும்,
நண்பர்களோடு பேசிப் பழகவே புறப்படும் நபர்கள் என்றும் எத்தனை பேர்… இதற்கு இடையில்
பணிபுரியும் ஆட்கள் மாலையில் தங்கள் வீடு சேர இருக்கும் மனிதர்கள் எத்தனை பேர்.. அதுவும்
இன்று ஞாயிறு என்பதால் அந்த நகரத்தில் கூட்டத்திற்குக் குறைவு ஏது…
வேலை இல்லாத நகர
வாசிகள் தங்களுடைய மனைவிமார்களுடன் சினிமா, டிராமா, பீட்சு என்று சுற்றி வரக் கிளம்பிவிட்டதால்
அன்று மௌண்ட் ரோடு ஒரு திருவிழாக் கோலம் பூண்டு இருந்தது. அந்தக் கூட்டத்தில் மணி, இராதா, பாக்கியம் இருப்பதைக்
கண்டான் செல்வம்.
பகீர் என்றது
செல்வத்திற்கு. இராதா யாரோ ஒரு வாலிபனிடம் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டுவிட்டான். அவளுடன் அவள் பக்கத்திதல் தேன் போன்ற இனிய முகத்தால், கண்ணால் கருவிழியாள்,
அழகிய உருவாள், மெல்லிய இடையாள், அன்ன நடையாள் ஒருவள் அவளருகில் நின்றுக் கொண்டு அவளும்
அந்த வாலிபனிடம் பேசிக் கொண்டு இருந்ததால் இவனுக்கு ஒரே குழப்பம். இராதாவுக்கும் அந்த வாலிபனுக்கும் என்ன உறவு…. அந்தப்
பெண்ணுக்கும் இவளுக்கும் என்ன உறவு என்று யோசிக்கையில் வண்டி நகர்ந்தது.
(8)
இரவு மணி ஏழு
இருக்கும். அந்த அந்தி மாலையில் சென்னை நகரம்
எவ்வளவு பரபரப்பைக் கொண்டு உள்ளது. அதுபோல
வட்டிக்கார வேலனின் உள்ளமும் ஓர் பரபரப்பை உண்டு பண்ணியது.
ஏதாவது பணம் களவு
போய்விட்டதா?... இல்லை விபத்துக்கள் நேரிட்டதா?... அப்படி என்றால் அவர் முகத்தில் சந்தோஷம்
தாண்டவமாடுகிறதே… அவருக்கு லாட்டரி பரிசு கிடைத்திருக்குமோ?... அப்படி இருக்காதே அப்படி
விழுந்தாலும் இந்த இரவு நேரத்தில் எப்படி செய்தி தெரியும்…
அடேயப்பா இந்தச்
செய்திகள் நாட்டில் எவ்வளவு முன்னேறி உள்ளது.
தொலைபேசியின் மூலம் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளவும், தினசரிப் பத்திரிகையின்
மூலம் அன்றாட செய்திகளையும் பல்லாயிரக் கணக்கான மயில்களுக்கு, கடலைத் தாண்டி இருக்கும்
ஒருவருடன் தொடர்பு கொள்ள மைக்ரோ ஃபோனும் கண்டுபிடித்து மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்கிறது
இந்தச் சமூகம். வேலனின் பரபரப்புக்குக் காரணம்
சற்று நேரத்துக்கு முன்…
ட்ரிக்ஸ்… ட்ரிக்ஸ்…
என்று டெலிபோன் அலரும் சத்தம் கேட்டு… கணக்கு வரவு செலவை பார்த்துக் கொண்டு இருந்தவர்
தன்னுடைய பட்டு ஜிப்பாவும், பட்டி வேட்டியும்
அகலக்கரை படிந்த மேல் துண்டும் வெள்ளை வெளேர்
என்று தும்பைப்பூ போல் அவர் உடலில் அந்த இரவு வேலையில் விளக்கு ஒளியில் கண்ணைப் பிடுங்க
தகதக என்று மின்ன தன்னுடைய நீர்யானை போன்ற உடம்பை மெல்ல ஆடி அசைந்து தம் கரத்தால் அந்தப்
போனை எடுத்தார்.
போனில் என்ன செய்திதான்
தந்தார்களோ தெரியவில்லை.. அப்போதிலிருந்து
உட்கார விருப்பம் இல்லாமல் வீட்டிற்கு வருவதும் தெருவாயற்படியைத் தாண்டி தெருக்கோடியை
எட்டிப் பார்ப்பதுமாக இருந்தார்.
வெளியில் சென்று
இருக்கும் தன் மகள் பாக்கியத்திற்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ? அப்படியென்றால் அவள் வரவை எதிர்பார்க்க முடியுமோ…
தொழில் சம்பந்தமாக யாரையாவது எதிர்பார்க்கிறாறோ… இருக்கலாம் யார் கண்டது. அப்போது,
வீதியெல்லாம்
தூசிகளைப் பரவ விட்டுக் கொண்டு ஓர் இயந்திரச் சத்தத்தோடு தடதட என்று வேலனின் வாயிற்படியில்
வந்து நின்றது. ஏதோ வண்டி வந்ததைக் கண்டு பரபரப்புடன்
தன்னுடலைத் தூக்கிக் கொண்டு வாயிற் படியை அடைந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த நபர் இல்லை போலும். மீண்டும் அவர் தன் முகத்தை ஏமாற்றம் கண்ட விதமாக
அவர் காணப்பட்டார்.
வந்தவர்கள் யாருமல்ல
அவருடைய மகள் பாக்கியமும், அவர்கள் வீட்டில் குடி இருக்கும் மணியும், இராதாவும் தான்.
என்னப்பா… யாரை
எதிர்ப்பார்க்கிறீர்கள்… என்று வந்ததும் வராததுமாக பாக்கியம் அவளுடைய அப்பாவின் முகவாட்டைத்தைக்
கண்டு கேட்டே விட்டாள்… முந்திரிக்கொட்டை போல.
ஆமாம்மா… நான்
நெடுநாளாக தேடிக் கொண்டிருந்த….
என்னப்பா… என்ன
சொல்றீங்க…
அப்போது…
ப்பிர்… கிர்… என்ற சத்தத்துடன் ஓர் போலீஸ் வேன் ஒன்று அவர்கள்
வீட்டுமுன் நின்றது.
பாக்கியம் நான்
எதிர்பார்த்தேனே… இவங்களைத்தான்… என்று சொல்லிக் கொண்டு வாயிற்படியைத் தாண்டி அவர்களை
வரவேற்க ஓடினார் வேலன்.
வேனில் இருந்து
இறங்கிய இரண்டு உருவங்களைக் கண்டதும், மணி பயந்து போய்விட்டான். வருவது இன்ஸ்பெக்டர் என்றால் பயம் இருக்கத்தானே
செய்யும். அதேசமயம்,
பாக்கியம்… என்னப்பா…
ராஜீ மாமா வருவதற்கா இப்படி என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது உடன் இன்னொரு வாலிபன்,
கட்டழகன், இளையவன் ஒருவன் வருவதைக் கண்டு திகைத்து நின்றுவிட்டாள்… ஆனால்,
இராதா, வருவது
யார் என்று தெரியும். ஆனால் இவன் அகப்பட்டும்
இவனை இன்ஸ்பெக்டர் இவர்கள் வீட்டிற்கு அழைத்து வரக் காரணம் தெரியாமல் முகத்தில் சந்தேகக்
குறியுடன் எல்லோரும் அப்பாவும் இன்ஸ்பெக்டரும் அவருடன் வரும் வாலிபனையும் உற்று பார்த்துக்
கொண்டு இருந்தனர். அவர்கள் பேச்சில் ஆர்வம்
காட்ட அவர்களின் செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டனர். அப்போது அவர்கள் பேசியதில் ஓர் உண்மை பிறப்பு இரகசியம்
எல்லாம் வெளிப்பட்டது.
ஒருவன் நாட்டின்
பிறந்து, வாழ்ந்து இறக்கும் வரை எத்தனை இன்பங்கள், எத்தனை துன்பங்கள். இப்படி எத்தனையோ ஏற்படுகிறது. அதுபோல தான் இங்கு இப்பொழுது அவர்கள் பேச்சில் ஒவ்வொருவருடைய
மனதிலும் ஆனந்தம் கூத்தாடியது.
வேலா… இதுதாண்டா…
நீ போன் செய்தியே
அப்பொழுதே எப்படி இருப்பான் என்று எல்லாம் அளவு எடுத்து வட்டியோட கணக்கு போட்டுட்டேன்.
ஏண்டா… இதிலேயும்
வட்டியா….
பின்னே… பத்து
வயதில் போனவன் இருபத்து ஐந்து வயதில் கண்டால் பதினைந்து வயதில் எப்படி இருப்பான்…
அப்பா… நீங்க
என்ன சொல்றீங்க … என்று குழம்பிய நிலையில் இருந்த பாக்கியம் கேட்டாள்.
அம்மா… மகளே…
நம் கஷ்டமெல்லாம் தீர்ந்து போச்சி… இது யார் தெரியுமா… பத்து வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போன
உன் அண்ணன் செல்வம்…
இதைக் கேட்ட செல்வம்
இந்த அழகிய அஜந்தா சிலையா என் தங்கை என்று வியப்பு மிக்க அவளை ஒருமுறை தலை உச்சியில்
இருந்து கால் நுனிவரை நோட்டம் விட்டான். அடடா
எவ்வளவு வளர்ந்துவிட்டாள். சின்ன வயதில் பார்த்த
போது வாயில் கையை வைத்துக் கொண்டு அசிங்கமாக இருந்தவள் எவ்வளவு முன்னேறி விட்டாள். அவளைச் சொல்லி குற்றம் இல்லை. நாடு அவ்வளவு வேகமாக
முன்னேறுகிறது.
இராதா… என்னடா
இது, இவரை இவனை அண்ணன் என்கிறார்கள், ஒன்றுமே புரியாதவளாக வியப்பு மேலிட அவனையே பார்த்துக்
கொண்டு இருந்தாள். அதேசமயம் செல்வமும் அவளைப்
பார்க்கும் போது வந்ததே வெட்கம்.
செல்வம் இவருதான்
உன்னோட தந்தை… இவள் உன் தங்கை என்று அறிமுகப்படுத்துகையில் பிரிந்த இரு உள்ளங்களின்
கொதிப்பு அடங்க அண்ணனும் தங்கையும் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் மல்க பேச முடியாமல்
தவித்தனர். செல்வம் அப்போது மெல்ல மணியும்
இராதாவும் இருக்கும் பக்கம் திரும்பவும்…
இவர்கள் நம் வீட்டில்
குடி இருக்கும் நபர்கள். இவன் பெயர் மணி. இவள் இவனுடைய வீட்டில் பணிபுரிந்த உடன்பிறவா தங்கை
இராதா.
தங்கை என்று சொன்னாரோ
இல்லையோ… அப்போது அவன் முகத்தில் கண்ட ஆனந்தத்துக்கு அணை போட்டாலும் உடைந்து அல்லவாவிடும்.
பல நாள் பிரிவா
அது… பல வருடங்கள் பிரிந்து இருந்து இப்போது
ஓர் வாலிபனாக தன் மகனைப் பார்த்து மகிழ்ச்சிக் கொண்ட வேலன். இன்ஸ்பெக்டரின் பேச்சைக் கேட்டு அனைவரும் திகைத்து
நின்றுவிட்டனர். ஆனால் இராதாவின் முகத்தில் எந்தவிதமான மாறுதலும் தெரியவில்லை.
எல்லோரும் செல்வத்தையே
உற்றுப் பார்க்க…
பாருங்க சார்…
இதற்குதான் நான் இவர்களைப் பார்க்கக் கூடாது என்று சொன்னேன்.
நிம்மதியாக சிறையில் கொடுமைப்படலாம்.
ஆனால் வாயில் கொடுஞ்சொல் பேசாமல் இருந்தான். இன்ஸ்பெக்டர் என் குற்றத்திற்குத் தண்டனை தெரியும். அதை எனக்குச் சீக்கிரம் வாங்கிக் கொடுங்க…
செல்வம் என்னடா…
சொல்லுற என்று பாசம் மிகுந்த குரலில் கேட்டார் வேலன்.
வேலா… உன் மகனுக்குத்
தண்டனை கெடையாது… அவன் நாட்டிற்கு ஓர் விதி விலக்கு. திருந்தி தன் குற்றத்தை ஒப்புக் கொண்டவனுக்குத்
தண்டனைக்குப் பதிலாக உதவியே கிடைக்கும்.
மகாத்மா காந்தியவர்கள்
பிறந்து வாழ்ந்து, நாட்டிற்கே தன்னை அர்ப்பணித்த அந்தப் புனித உள்ளம் கொண்ட தந்தைக்குத்
தீங்கு செய்யலாமா… அவர் வகுத்த வழியே தானே நமது வழி. அவர் வாங்கித் தந்தது தானே நமது சுதந்திரம். அவர் இல்லையேல் நாம் ஏது. அடிமையை விரட்டிய உத்தமபுத்திரர் பிறந்த இந்த பாரதத்தில்
அவருடைய காந்தியம் போய்விடுமா? அவர் மறைந்தாலும்
அருடைய மகிமை அழியாத நாட்டில் செல்வத்திற்கும் நல்ல தீர்ப்பே வழங்கும். என்று இன்ஸ்பெக்டர் ஒரு சொற்பொழிவே ஆற்றினார்.
(9)
காலை ஞாயிறின்
ஒளியில் புத்துணர்ச்சி பெறுபவைகள் எத்தனை.
காலை ஒளியில் பனித்துளிகள் நம்மையும், நம்மிடத்தையும் அகற்றி, சூரிய காந்திப்
பூவிற்குப் புத்துயிர் கொடுக்கும் அந்த இளங்காலை வேளையில் வட்டிக்கார வேலனின் புறக்கடைப்
பக்கம்….
பனியின் கொடுமையில்
விடுதலை பெற்று தனது இதழைப் பரப்பி மணம் கமழச் செய்யும் பூக்களின் இடையே வண்ணத்துப்
பூச்சிகள் மல்லிகையின் மணத்தை நுகரத் துடிக்குதுவே… அதுபோல,
அந்தக் காலை வேளையின்
இராதா கிணற்றடியில் சாமான்களைக் கழுவும்போது மெல்ல அடிமேல் அடிவைத்து தன் உடம்பில்
அசைவே இல்லாமல், கண்ணிமை அசையாது, சப்தம் ஒலியாது, மெல்ல மெல்ல ஓர் தளிர் உருவம் அந்தக்
காலை சூரிய ஒளியில் தங்கச் சிலையில் செதுக்கி வைத்த விக்ரகம் நகர்ந்து வருவது போல மெல்ல
அடிமேல் அடிவைத்து இராதா இருக்கும் கிணற்றடிக்கு வந்தான் செல்வம்.
திடீரென்று ஓர்
சந்திப்பு ஏற்பட்டால் அது சந்தோசமாகவும் இருக்கும். அதே சமயம் இக்கட்டான நிலையையும் ஏற்படுத்தும். எதிரி ஒருவன் திடீரென்று சந்திப்பு உண்டானால் அவனுள்
அக்கினிக் குழம்பாக இருந்த அவனது வெறி பகைவனைத் தாக்கவே செய்யும். ஆனால் நீண்ட நாள் பிரிவின் கீழ் சந்திக்கும் நண்பர்களிடம்
காணும் மகிழ்ச்சி, அணையில் கட்டுப்பட்டு ஓர் நிலையில் இருந்து தனது வெப்பநிலை போன்ற
அன்றாட வாழ்வில் இருக்கும் நீர், அணையில் இருந்து விடுபடும்போது விட்டால் போதும் என்று
வெகு வேகமாக முன்னேறி வெளி வருகிறது. அதுபோலத்தான்
நண்பர்கள் சந்திப்பும்.
ஆரம்பக் காதலர்கள்
சந்திக்கும் சந்திப்புக்கு மகிழ்ச்சி உண்டு.
ஆனால் அது பேச்சு அளவில் உருவெடுக்காமல் மௌமான தன் பாவையாலே செயல்பட்டு விடும். அதுபோல இருக்குமோ இராதாவும் செல்வமும் இப்பொழுது
தனிமையில் கண்டு இருக்கிறார்களே… இல்லை அவள் அவளாக இல்லாமல் தெளிவாக அவனுடன் பேசுவாளா…
என்று எண்ணியவர்களை…
என்னங்க… ஆம்
இராதா தான் பேசியது. நாம் நினைத்தது போல இல்லை
இவர்கள் சந்திப்பு. ஏனென்றால் அவள் இவனுக்குக்
கொடுத்த வரம் எது? நல்லவன் இவன் என்று பலர்
வாய் சொல்ல வேண்டும் என்பது தானே…
என்னங்க… நீங்க
உண்மையாவா? அந்தக் கூட்டத்தை விட்டு வந்துட்டீங்க…
இராதா உன்னை அடைய
என் உயிரையே தியாகம் செய்யத் தயார்.
அப்படியா…
ஆமாம். இராதா நான் உன் மீது அளவு கடந்த அன்பு கொண்டுள்ளேன்.
அப்படியானால்
ஒன்று செய்யுங்களேன்.
என்ன செய்யவேண்டும்
சொல்லு... என் அன்பே…
நீங்க இதுவரை
செய்த கொடுமைக்குத் தகுந்த தண்டனை…
போதும்… இராதா
நீ சொல்வது எனக்குப் புரிகிறது. நானும் அதைத்தான் விரும்புகிறேன்… ஆனால்… நீ…
அதுவரை காத்திருப்பாயா?...
என்கிறாய் …
ஆமாம்…
என்னால் ஒருவன்
திருந்தினான் என்றால் அவனுக்காக தன் உயிரையே கொடுக்க என்றும் என் உள்ளமும் உடலும் தலை
தாழ்த்தும்…
இதுபோதும் இராதா. நான் இனி நிம்மதியாக என் சிறை வாழ்க்கையை ஒரு இன்ப
வாழ்க்கையாகக் கழிப்பேன் இராதா. அப்போது, திடீரென்று
ஓர் குரல்…
சபாஷ் செல்வம்…
இந்தக் குரல்
கேட்டதும்… இஞ்சி தின்ற குரங்கு போல செல்வமும் இராதாவும் தவறு செய்துவிட்டோமோ என்று
குரல் வந்த திசையில் மெல்ல அத்திரு உருவங்களின் பால் போன்ற வெண் முகங்கள் இரண்டும் அந்தக் காலை வெய்யிலில் சூரியனின் ஒளியில்
தன்னோட துளிர் மேனியை அன்னம் போல அசைத்துக் கொண்டு திரும்பினர்.
அந்த உருவைக்
கண்டதும் பகீர் என்றது இராதாவுக்கு. அவனிடம்
தாம் மன்னிப்பு கோரும் முகமாக அவளது செந்தூரச் செம்பவளக் கண்ணங்களில் நீர் மல்க, முகத்தில்
தளர்ச்சி தோன்ற அவனையே உற்று நோக்கினாள். ஆனால்
செல்வமோ அந்த இளம் வெய்யிலில் தன்னுடைய கம்பீரமான தோற்றத்துடன் அவன் என்ன சொல்லப் போகிறானோ…
என்று வியப்பு மேலிட அவனை நோக்கினான்.
மீண்டும் சபாஷ்
செல்வம்… இராதா உன்னை… என்று எதையோ சொல்ல வந்தவன்… ஏனோ தெரியவில்லை அவனுடைய நா அதை
வெளியிடாமல் அடக்கிவிட்டது…
அவன் இவ்வாறு
பேசியதும் இராதாவுக்குத் தர்ம சங்கடமாகப் போய்விட்டது. என்னை மன்னித்துடுங்க… நான்… அப்போது,
எனக்குத் தெரியும்
இராதா… உன்னோட எண்ணம்… உன்னோட செயல், எல்லாம் எனக்குத் தெரியும்… ஆனால் நீ யாரை விரும்புகிறாய்,
எப்படி எந்த வகையில் விரும்புகிறாய் என்று தான் தெரியாமல் இதுவரை திண்டாடினேன்… இப்பொழுது
புரிந்தது. உனக்கு விடிவு காலமும் வந்தது.
என்ன சொல்லுறீங்க…
இப்பொழுதே அப்பாவுக்குக்
கடிதம் எழுதப் போகிறேன்…
ஐயோ… வேண்டாங்க…
அவங்களுக்குத் தெரிந்தால்…
என்றைக்குமே தெரியாமல்
போய்டுமா…
அதற்கல்ல… அவர்
இப்போ… ஒரு குற்றவாளி…
அதற்கென்ன அவர்
தான் எந்த தண்டனையானாலும் பெற விரும்புகிறானே… அதுவும் உனக்காக… செல்வம் உன்னை என்னால்
பாராட்டாமல் இருக்க முடியலே… ஏன்னா… ஒரு பெண்ணுக்காக தன் திருட்டுத் தொழிலையே விட்டுட்டு…
மிஸ்டர்… மீண்டும்
அதை ஞாபகப் படுத்தாதீங்க… அந்த்த தீய செயலில் இருந்து நல்ல மனிதனாய்… நாட்டின் குடிமகனாய்…
காந்தியின் பிள்ளையாய், பாரதத்தின் வாரிசாய் வாழ என் மனம் துடிக்கும் போது நீ மீண்டும்
அந்தச் செயலை என்னை நினைக்கும் படித் தூண்டாதே… மிஸ்டர்… என்று தன் மன வருத்தத்துடன்
கூறினான் செல்வம்.
அப்படியென்றால்
நான் இப்பொழுதே கடிதம் எழுத எனக்கு உரிமை இல்லையா?... ஒரு தங்கையின் நல்வாழ்வை அமைக்கும்
பொறுப்பு எனக்கு இல்லையா?... தன்னுடைய தங்கையின் கணவனை நிர்ணயிக்கும் உரிமை எனக்கு
இல்லையா?...
நீங்க என்ன சொல்லுறீங்க…
நான் இவளை ரொம்ப நேசிக்கிறேன். நான் கல்யாணம்
செய்துக் கொண்டால் இவளைத் தான் செய்துக் கொள்வேன். இல்லை என்றால்…
இல்லை என்றால்…
இல்லை என்றால்
இந்த உலகில் எனக்கு என்று இருக்கும் இவளை விட்டு பிரிந்தால் இவ்வுலகில் எனக்கு என்ன
இருக்கிறது…
ஏன்? உன் அப்பா,
தங்கை…
மிஸ்டர்… நான்
மனிதனாக வாழ விரும்பியதே இவளுடன் வாழ வேண்டும் என்பதற்காகத் தான். இவளுடன் எனக்கு வாழக் கொடுத்து வைக்கவில்லை என்றால்
நான் எதற்கு உயிருடன் இருக்க வேண்டும்.
அண்ணா… என்னை
நம்பி… தீயவன் என்பதை நல்லவனாக மாறிய அவருக்கு நான் கடமைப்பட்டவள்…
தங்கச்சி எனக்குத்
தெரியும் எல்லாம்.
என்ன தம்பி ஏதோ
காலையில்…
ஒண்ணுமில்லீங்க…
சும்மா காதல் விளையாட்டு…
ஓ… காதல் விளையாட்டா…
என்று சிரிக்க ஆரம்பித்தனர். என்ன சொன்னீங்க
காதல் விளையாட்டா… யாருக்கு என்று முன்னே இருந்த நிலையில் மாறுபட்டு பரபரப்பானார் வேலன்.
யாருக்குமில்லீங்க...
உங்க மகனுக்கும் என் தங்கைக்கும்…
என்ன செல்வத்திற்குமா…
அப்பா… நான் இவளை
அதான் சொன்னானே
மணி…
அதுக்கு நீங்க…
ஒருக்காலும் சம்மதிக்க
மாட்டேன்.
அப்பா…நான்…
தெரியும்டா இவளைத்தான்
கட்டிக்கணும் என்பாய்… அதற்கு நான் சம்மதம் தரவேண்டும் என்று சொன்னார்…
நாட்டில் எத்தனை
இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன. தந்தைமார்கள் தங்கள்
சேய்களுக்குச் செய்ய வேண்டிய திருமணத்தை இப்பொழுது யார்தான் செய்துக்கொள்கிறார்கள். அப்படி செய்பவர்கள் யாரோ ஒருவர் தானே… அப்படி இல்லாமல்
மணமகனே மணமகளைத் தேர்ந்து எடுத்தால் மானமுள்ள தந்தை விரும்புவானா?... விரும்பமாட்டானா?...
பார்ப்போமே…
செல்வத்தை ஒரே
ஒரு முறை நன்றாக தன்னோட இரு கண்களும் வெளிப்பட, தன் மார்பகம் சாதாரண நிலையைவிட அதிகரிக்க
சில்க் ஜிப்பா இளவெயிலில் மின்ன அவனை ஒரு முறை முறைத்துவிட்டுச் சென்றாரே… சென்றவர்
தம்பி மணி இப்படி வர்ரியா… என்று வேலன் கூப்பிட்டுட்டு சென்றார். அவர் பின் அவன் செல்ல மீண்டும் அந்தக் காதல் கிளிகள்
தனிமையில் விடப்பட்டன.
இதுவரை பேசாது
இருந்தவர்கள் தங்களுக்கு எதிர்ப்பு வருகிறது எண்ணி குமுறிக் கொண்டு இருந்தவர்கள் இப்போது…
இராதா என்ன ஆனாலும்
சரி வாழ்ந்தால் உன்னோடு தான்… இல்லை என்றால் எமனோடு தான்… இதற்கு நீ…
என் வாழ்வும்
உன்னோடு தான்… காலம் வரும் காத்திருப்போம்…
வீட்டில் மணி
நீ உங்க அப்பாவிற்குக் கடிதம் எழுதிப்போடு…
என்ன சார்… சொல்றீங்க…
ஆமாம்பா… இராதாவை
என் மருகளாக இல்லை… ஓர் இலட்சியவாதி. என் மகனை திருத்தியவள் என் மருமகளாக வர நான் கொடுத்து
வைக்கணும் தம்பி…
அப்படி என்றால்
நீங்க அங்கே பேசியது…
எல்லாம் வெறும்
நடிப்புத்தான். அவனோட மனதைத் தெரிந்துக் கொள்ளத்தான்
இப்படி எல்லாம் பேசினது. நான் இரவே முடிவு
செய்துட்டேன்…
அதெப்படி சார்…
அவர்கள் பார்வையை
நீர் பார்த்திருந்தாயானால் தானே தெரியும்…
அப்படியா…
தம்பி. இந்த விஷயம் யாவருக்கும் தெரிய வேண்டாம். எல்லாம் இரகசியமாகவே நடக்கட்டும்…
இதற்குள் அவர்கள்…
அதெல்லாம் நடக்காமல்
நான் பார்த்துக்கொள்கிறேன். ஆனால்..
ஆனால் என்ன சார்…
ஒண்ணுமில்லை…
முதலில் பாக்கியத்திற்குக் கல்யாணம் செய்து வைத்துவிட்டால் என்று சொன்னதும்…
இதுவரை மௌமாக
அமர்ந்து இருந்த அவன் பரபரப்போடு பாக்கியத்திற்கு கல்யாணமா…
என்ன தம்பி… அவள்
கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா…
அ…அதற்…கல்ல என்று
சொல் தடுமாற முடித்தான்.
தம்பி எல்லாம்
எனக்குத் தெரியும். நீ முதலில் அதைச்செய்…
என்றார் வேலன்.
கடிதம் எழுத எப்படி
மனம் வரும். தன் நிலையே இப்படி இருதலைக் கொல்லி
எறும்பாக இருக்கையில் மற்றவர்கள் நலனை யோசிக்க அவனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும்,
அது தனது சகோதரி என்று நினைத்துத் தனக்கு எப்படியானாலும் தன் சகோதரி நன்றாக இருந்தால்
அது போதும் என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு கடிதத்தை எழுத எழுதுகோலை எடுத்தான். வரைந்தான் அந்த முத்துச் சொற்களை…
(10)
கடிகாரம் தங்கினாலும்
காலம் தன் போக்கில் மெல்ல நகர்ந்துக் கொண்டே இருக்கின்றது. வெள்ளிக்கிழமை போனால் அடுத்த
வாரம் வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த மாதம்
போனால் அதே மாதம் அடுத்த வருடம் வருகிறது.
ஆனால் இந்த நாள் போனால் அடுத்த நாள் தான் வருமே தவிர அந்த இனிய பொன்னான நாள்
வரப்போவது இல்லை. அதனால் தானோ பெரியவர்கள்
காலம் பொன்னானது என்றார்கள். இதற்கு விதி விலக்கு
தான் அந்த எழில் மிக்க, மனம் கமழும், பசுமை மிக்க, வசதி படைத்த வையாபுரி கிராமமும்
ஒன்று. அங்கு,
காலை வேளையில்
அவரவர்கள் தம்தம் வேலைகளில் இயந்திரம் சுழலுவது போல சுழன்று ஒவ்வொருவரும் அவரவர்கள்
தங்கள் மாடுகளையும் ஏர்ப் பொருள்களையும் எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்றனர். நெசவாளிகள் தங்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டனர்.
அதேபோல் பெண்கள் காலையில் வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து வாசலின் முன் கோலம் இட்டுத்
தண்ணீர் கொண்டு வர அந்தத் தென்னைமர நிரலில்
செல்வதும் ஓர் வேடிக்கை தான்.
நகரத்தில் காலையில்
எழுந்தால் பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் எவ்வளவு பேர். அவர்கள் தங்கள் வேலைகளை நிழலில் அமர்ந்து செய்கிறார்கள். அவர்கள் வயிற்றுப் பசிக்கான பொருள்களைக் கிராம மக்கள்
பயிரிட்டு பசிப்பிணி போக்குகிறார்கள். மாலையிலும்
அவர்கள் கிராம வாசிகள் தங்கள் வீட்டிற்கு வேலையில் இருந்து விடுதலை பெற்று வருகிறார்கள். அதுபோலவே நகர வாசிகள் தங்கள் பணியை முடித்துவிட்டு
பேருந்துக்காகக் காக்க வேண்டும்.
காலா காலத்தில்
எல்லாம் நடந்து முடிவது தானே நாட்டின் சட்டம்.
சூரியன் காலையில் தோன்றுகிறான். அதேபோல் அவன் மறுதிசையில் மாலை வேளையில் மறைகிறான். இரவின் ஆரம்பமே சந்திரன் தோன்றல் முடிவு சந்திரன்
மறைவது. அதுபோல காலை வேளையில் செய்திகள் தெரிய
செய்தித் தாள்கள் இருக்கின்றன. அவரவர் செய்தியறிய
தபால் தந்தி நிலையத்திலிருந்து வரும் கடித்தை எதிர்பார்ப்பார்கள்.
அந்தக் காலை நேரத்தில்
காக்கிக் சட்டையும், முழு நிஜாரும் அணிந்த தோளில் ஒரு பை மாட்டிக் கொண்டும் அவருக்குத்
துணையாக இல்லை இவருக்குத் துணையாக ஒரு தடதட எண்ணும் ஓசை எழுப்பும் மிதிவண்டி அந்தத்
தபால்காரரைச் சுமந்து வந்தது. அது திடீரென்று
ஒரு வீட்டின்முன் நின்று அந்த வீட்டுக்காரரிடம் ஒரு கடிதம் கொடுத்து விட்டுப் போனார்.
என்னங்க அது…
கடுதாசி வந்திருக்குது…
எங்கிருந்துங்க…
வேறயாருகிட்ட
இருந்து நமக்குக் கடுதாசி வரப்போகுது…
பிரிச்சுதான்
சொல்லுங்களேன்…
மணி கிட்டே இருந்து
வந்திருக்கிறது மங்கை…
தன் மகன்கிட்ட
இருந்து கடுதாசி வந்திருப்பதைக் கேட்டதும் எந்த வேலையைச் செய்துக்கொண்டு இருந்தாளோ…
அப்படியே போட்டுவிட்டு செய்தியை அறிய தன்னாசைத் தலைவனிடம் ஓடி வந்தாள். என்னங்க எழுதி இருக்கு…
தான் ஒருவன் மீது
அளவு கடந்த அன்பை வைத்திருந்தால் அவனின் பிரிவு அவர்களுக்குப் பெரும் துயரைக் கொடுக்கும். அதேசமயம், அவனிடம் இருந்து ஒரு செய்தி வந்தாலே அவனை
நேரில் காணும் ஒரு பிரமை ஏற்படும். இது ஒரு
விதி. இந்த விதிக்கு மணியின் அன்புத்தாய் மட்டும்
விதிவிலக்கா என்ன? அப்படி இல்லையே. அதனால் தான் தன் வேலையை விட்டுவிட்டு ஓடோடி வந்தாளோ?...
கடிதத்தில்,
அன்புள்ள அப்பா,
அம்மா அவர்களுக்கு தங்கள் ஆசை மகன் மணி எழுதும் மடல்,
யாதெனில், இங்கு
இராதாவும், நானும் சுகமாக இருக்கிறோம். தங்கள்
சுகம் அறிய அவா… கல்யாண விஷயமாக தாங்கள் பேச வேண்டி இருப்பதால் தாங்கள் உடனடியாக புறப்பட்டு
வரவும்.
இப்படிக்கு
உங்கள்
அன்பு மகன்
மணி
என்னங்க
இது… யாருக்குக் கல்யாணம்.
அதுதானே ஒண்ணும்
புரியலே. இப்படி மொட்டையாக ரெண்டே வரியில்
எழுதி அனுப்பினானே…
இராதாவுக்கு…
யாரு கண்டா… நீ…
புறப்படு… நான் பணம் சுதாரித்துக் கொண்டு வருகிறேன்.
(11)
பருவம் அடைந்த
ஒருவனின் முகத்தில் அவர் மடியும் வரை அதிகமான வித்தியாசம் தெரிவது இல்லை. ஆனால் குழந்தைகளின் முகம் மட்டும் பருவம் அடையும்
காலத்திற்குள் எத்தனை முகமாற்றம். இதனால் தான்
குழந்தையில் பிரிந்த செல்வத்தை அவனின் பெற்றோரே தெரிந்துக்கொள்ள முடியவில்லை. முதிர்ச்சியுற்றவரின் முகம் அதிக மாற்றம் தெரியாது. இதனால் நீண்ட நாள் பிரிவிலும் தனது நண்பர்கள், உறவினர்களை
நாம் காணமுடிகிறது.
வேலனின் வீட்டின்
முன் சின்னஞ் சிறு தடதட வண்டி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு உருவங்கள் இறங்கி வீட்டிற்குள்
நுழைந்தன. அப்போது, அடே மாணிக்கமா… எங்கடா இப்பதான் என் வீடு தெரிந்ததா…
நீ வேலன் இல்லே…
ஆமாம்டா… நீ இங்கயா இருக்கிறே…
என்னடா என் வீட்டிற்கு
வந்து என்னையே கேட்டால்…
என்ன இது உன்
வீடா…
ஆமாண்டா… அக்கா…
வாங்க உட்காருங்க… அம்மா. பாக்கியம் காபி ரெண்டு
கொண்டாம்மா…
ஏண்டா… வீட்டில்
பிள்ளைகள் எல்லாம் சுகமாக இருக்கிறார்களா?...
ஏண்டா…. உன் வீட்டிலேயே
வைத்துக் கொண்டு என்னையே கேட்கிறாயே…
என்னடா சொல்லுகிறாய்…
ஆமாம் தம்பி… உன் வீட்டில் குடி இருக்கிறார்களே அவர்கள்
தான் என் பிள்ளை மணி. அவனோட கூட இருக்காளே
அவள் தான் உன் மகள் இராதா…
அப்படியா… டேய்
இதுவரை நீ எனக்கு சொல்லலீயே…
ஏண்டா தம்பி நீ
எங்க இருக்கே என் பொண்ணு எப்படி இருக்கிறாள் என்று கேட்கலாம். அப்ப அப்ப வந்து பார்த்துப் போனால் தானே… தாய்ப்பாசம்
இருக்கும்…
மாணிக்கம் காபி
குடிடா… அக்கா இந்தா…
இது…
தெரியலுயா… இதாங்கா…
பாக்கியம்.
பாக்கியமா… என்னங்க
எப்படி வளர்ந்து இருக்கிறாள்…
ஏன் இராதா மட்டும்
எப்படி வளர்ந்து இருக்கிறாள்…
அது இருக்கட்டும். மணி, இராதா எங்கே… ஏதோ கல்யாணம் என்று கூப்பிட்டாங்க…
மாணிக்கம் நாம்
செய்த சிறு தவறு இப்பொழுது எப்படி மாறிவிட்டது பார்த்தியா…
என்னடா சொல்லுற…
ஆமாண்டா… என்
மகள் பாக்கியம் அதாவது நீ பெற்றெடுத்த மகள் பாக்கியம் உன் மகன் மணியைக் காதலிக்கிறாள். அதுபோலவே, மணியும் அவளைக் காதலிக்கிறாள். உன்மகள் இராதாவை அதாவது நான் பெற்ற மகள் இராதாவை
என் மகன் காதலிக்கிறான். அவளும் அவனைக் காதலிக்கிறாள். இவர்கள் காதல் ஒரு விசித்திரமானது. செல்வம் காணாமல் போனது உங்களுக்கத் தெரியாது இல்லே…
என்ன செல்வம்
காணாது போனானா?
ஆமாம்… குழந்தையில்
போனவன் இப்பொழுது இராதாவின் காதலனாக வீடு வந்து இருக்கிறான். அவன் கவலையில் தான் நான் எல்லாத்தையும் மறந்து போய்ட்டேன்.
அது சரிடா… இப்படி
அண்ணனும் தங்கையும் காதலிக்கிறது…
அதாண்டா அன்னிக்கு
நாம் செய்துக்கொண்ட ஒப்பந்தம்… அன்று…
வேலா… உம் பொண்ணை
என் மகனுக்குக் கட்டி என் பெண்ணை உன் பையனுக்குக் கட்டி வைக்கனும்டா…
அப்படியே செய்வோம்…
அதுசரி, என் மருமகளை என்னிடம் கொடுத்திடு.
உன் மருமகளை நான் உன்னிடம் தருகிறேன்.
எப்படி என் ஐடியா…
அப்படியே செய்வோம்.
அந்த மாற்றம்
தான் இன்று பெரும் விபரீதமாக மாறிவிட்டதே…. இப்ப என்னடா செய்கிறது…
டேய்… நான் வந்து
போனதாக அவர்களுக்குச் சொல்லாதே… யோசித்துக் கொண்டு மீண்டும் நான் வருகிறேன்…
சரி போய் வாடா…
இவர்கள் வந்ததும்
தெரியாது போனதும் மணிக்கும் இராதாவுக்குத்
தெரியாது என்று பெற்றோர்கள் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், அவர்களின்
உரையாடலை ஒட்டுக் கேட்டுக் கொண்டு இருக்கும் நான்கு இரண்டு எட்டு செவிகளையும் கூர்மையாக்கிக்
கொண்டு கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்கள்
உரையாடலைக் கேட்ட நான்கு பேர்களின் முகமும் சோகக் களையில் மூழ்கியது.
அன்று இரவு நான்கு
பேரும் தீவிர சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வந்தவர்கள் எழுந்து அவர்கள் முடிவுக்கு
நிறைவு செய்ய எழுந்தனர்.
சின்னஞ்சிறு கிராமம்
அன்று சந்தோஷமாக இருந்தது. திடீரென்று துன்பத்தில்
மூழ்கிய அது மனம் அழுகிய வாசனை வீச ஆரம்பித்தது. அந்த ஊரிலே நல்ல பெயரும், புகழும் கொண்ட மாணிக்கத்தின்
வீட்டின் முன் ஓர் துன்ப நிகழ்ச்சி நிகழ்ந்ததோ… என்னவோ மகிழ்ச்சியாக இருந்த அந்த வீட்டில்
அழுகுரல் வானைப் பிளந்துசென்றது. இவ்வழுகுரல்
சற்று முன் வந்த தந்தியில் அப்படி என்ன தான் இருந்தது. அதில்…
மாணிக்கத்திற்கு
இராதா, மணி, செல்வம், பாக்கியம் தற்கொலை செய்து கொண்டார்கள்.
இப்படிக்கு
வேலன்
இத்தந்தி தான்
அந்த ஊரையே துன்பத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால் மணி தாய் தந்தைக்கு மட்டும் பிள்ளையாக
இருந்தால் அந்தக் கவலை இல்லை. ஆனால் அவன்
ஊரின் பிள்ளை. ஆமாம் மணி தான் அந்த ஊரின் எழுச்சியை
நன்றாக மாற்றத் தன்னுயிர் கொடுத்த இளம் வாலிபன் ஒருவன் இந்த நிலை என்றால் அவனுடைய தந்தைகளும்,
தாய்களும், உடன்பிறவா தம்பி தங்கைகளும் சும்மா இருக்க முடியுமா… விரைந்தனர் மணியையும் இராதாவையும் காண…
அந்த மாபெரும்
சென்னை மாநகரில் எங்குப் பார்த்தாலும் ஒரே சத்தம் அந்தச் சத்தத்தை எல்லாம் வீறிட்டுக்
கொண்டு வந்தது வேலன் வீட்டின் அழுகுரல்.
இச்செய்தி எப்படித்தான்
எட்டியதோ… குவியலாக வந்துக் குவிந்தனர் ஊர் மக்கள். அவர்கள் விரட்டிய போலீசார் இடைஞ்சல் ஏற்பாடுகள் பல செய்ய வேண்டி இருந்தது.
ஏனென்றால் இளம்
இரு காதல் ஜோடிகள் ஒரே வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டாகள் என்றால் கூட்டத்திற்கு
சொல்லவா வேண்டும்.
கம்பீரமான தோற்றத்தையும்,
வீர நடை புரியும் செல்வனும் அழகிய முகத்தானும் அன்ன நடையாள் அவள் இராதாவும் ஒன்றாகக்
கைக்கோர்த்துத் தற்கொலை செய்துக் கொண்டு இருப்பதையும், அதுபோல கருங்கண் விழியாள், மெல்ல
மெலிந்த இடையாள் அவள் பாக்கியமும் காதல் இளவரசன் காவியத் தலைவன் அன்பு உள்ளங்களில்
நிறைந்தவன் அவன் மணியும் ஒன்றாக கைக்கோர்த்து தற்கொலை செய்துக் கொண்டு இருந்தார்கள்.
சிரிப்பும், மகிழ்ச்சியும்
கூத்தும் கொண்டு இருந்த அந்த இடம் இப்பொழுது போலீஸ் அதிகாரிகள் பலர் வரவும் போகவும்
அந்த வீடே இப்பொழுது அந்த வீட்டில் சோதனை நடந்துக் கொண்டு இருந்தது. தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை போலும்… போலீசாரின்
முகத்தில் ஒரு முடிவும் காணவில்லை. சிறிது
நேரத்தில் எல்லோரும் பரபரப்புடன் சென்று ஓர் இடத்தில் மடித்து வைத்து இருந்த கடிதத்தை
எடுத்துப் படிக்கலானான்…அதேசமயம்,
மணியின் தாய்
தந்தையர்கள் வந்து விட்டார்கள். அப்போது வீட்டில்
வரும் அழுகுரல் அந்த வீட்டையும் அதிரும் படி செய்து ஒலி வானையும் பிளந்து சென்றன.
போலீசின் தடங்கள்களினால்
அந்த ஒலி சற்று குறைந்ததே… ஆனால் வையாபுரி கிராமத்தில் மணியால் பேணி வளர்ந்த சின்னஞ்சிறு
செடிகளும், தென்னை மரங்களும் வாடி தங்கள் துன்பத்தை எடுத்து உரைத்தது என்றால் மனிதர்களுக்கு
எப்படி இருக்கும்.
அந்தக் கடிதத்தில்,
அம்மா, அப்பா
மார்களுக்குத் தங்கள் புதல்வர்கள் (மணி, செல்வம், இராதா, பாக்கியம்) எழுதுவது…
யாதெனில்,
மன்னிக்கவும். நாங்கள் எங்கள் பிறப்பைப் பற்றித் தெரிந்துக்கொண்டோம். நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பிய பிறகு தங்கை என்று
தெரிந்து அவர்களைப் பிரிந்து வாழ எங்களுக்கு மனம் வரவில்லை. ஆனால் என்ன செய்வது என்று ஆராய்ந்தோம். வழி கிடைத்தது. இதுவே, நம் தந்தைமார்கள் ஊரில் உள்ள செடிகளை நன்றாக
வளர்க்கும்படி அவர்களைக் கரம் தாழ்த்தி வேண்டுகிறேன்.
அம்மா, அப்பா…
நீங்கள் இங்கு வந்து போனது எங்களுக்குத் தெரியாது என்று நினைத்தீர்கள்… ஆனால் நாங்கள்
நீங்கள் பேசியதைக் கேட்டோம். அதனால் தான் மனம் உடைந்த நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம். வருந்த வேண்டாம் இருந்தாலும் நாங்கள் மகிழ்ச்சி
இல்லாமல் தான் இருப்போம். அதனால் எப்படி இருந்தாலும்
இதுவே நாங்கள் பிரியாமல் இருக்கும் வழி.
போலீஸ் அதிகாரி
அவர்களுக்கு எங்கள் தற்கொலை தாங்களே எடுத்துக் கொண்ட முடிவு. இதற்குக் காரணம் யாரும் இல்லை.
இப்படிக்கு
உங்கள் அன்புச்
சேய்கள்
மணி, செல்வம்,
இராதா, பாக்கியம்
இக்கடிதம் கண்டதுதான்
தாமதம். எங்கிருந்துதான் வந்ததோ மீண்டும் வானைப்
பிளக்கும் அழுகுரல். அப்போது, வெள்ளை நிற வேன்
ஒன்று வந்து பிணங்களை மருத்துவ பரிசோதனைக்காக ஏற்றிக் கொண்டு சென்றது.
அந்த வேன் போனது
தான் தாமதம் தன் ஆசை, பெருமை, சொத்து எல்லாமே போய்விட்டது. இனி ஏன் இன்னும் இந்தப் பாவிகளின் உயிர் ஊசலாடுகிறதோ
என்று எண்ணிக் கொண்டு வேனின் பின்னே வேலனும், மங்கையும், மாணிக்கமும் ஓடினார்கள். அவர்கள் பின்னால் ஒரு லாரி வேகமாக வந்து அவர்கள்
மீது மோத அவ்வுயிர்களும் அந்த நான்கு உயிருடன் இந்த மூன்றும் சேர்ந்து ஏழாக அந்த வானமே
வியக்கும் வண்ணம் தன் துன்பத்தை மழையாய்ப் பெய்தது.
Comments
Post a Comment